BABY STORIES

 

ஒரு சனிக்கிழமை காலையன்று, பீமன் மிக்க எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.
அன்றைய மறுநாள் அவனது பிறந்தநாள்.
அவனுடைய நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு வரவைத்து அவர்களுக்கு அம்மா செய்து கொடுத்த கொழுக்கட்டை, பாயசம், முறுக்கு என சுவையான தின்பண்டங்களை அளிக்க திட்டமிட்டிருந்தான்.
விருந்திற்கு பிறகு, சிறுவர்கள் விளையாடுவதற்காக அவன் தந்தையிடம், திருடன்-போலீஸ், வினாடி வினா, கிரிகெட் என சில விளையாட்டுகளை நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். . அவன் தந்தையும் அவ்வாரே செய்வதாக ஒப்புக்கொண்டு வினாடி வினாவிற்கான கேள்விகளை சேர்க்க தொடங்கினார்.

பீமனின் தங்கை, துஷாலா, அவனுக்கு வந்த பரிசுகளை அடுக்கிவைக்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள்.

Bhima's Birthday Gift

மேலும் அவளை, பதினைந்து சிறு அட்டைகளில் வண்ணமயமான ஓவியம் வரைந்து கொடுக்குமாறு  கேட்டான். அவ்வட்டைகளை அவன் நண்பர்களுக்கு அழைப்பிதழ்களாக கொடுக்க நினைத்தான்.

 

இதையெல்லாம் பீமன் ஒரு வாரமாக பெற்றோருடன் ஆலோசித்து, திட்டமிட்டு செயல்பட்டான்.
“துஷாலா! என் பிறந்தநாள் விழாவிற்கான  அழைப்பிதழ்கள் எங்கே?”
“இன்னும் ஒரு நாள் இருக்கின்றதே! என்ன அவசரம் உனக்கு?” என்று கேட்டாள் அவன் தங்கை.
“இன்றே கொடுக்கவேண்டும்! இன்று சனிக்கிழமை . எனது பிறந்தநாளோ நாளை-ஞாயிறு. நாளை பள்ளிக்கூடம் மூடி இருக்கும். இன்று இல்லாவிட்டால் நான் அவர்களை அழைக்க இயலாதே!”
துஷாலா சிரித்தபடி தனது பையில்லிருந்து இருபது அழகான அழைப்பிதழ்களை எடுத்து கொடுத்தாள்.
“இவை நேற்றே தயாராக இருந்தன. நீதான் கேட்கவில்லை!”
“மிக்க நன்றி துஷாலா! இவை மிக அழகாக உள்ளன!” என்று உற்சாகத்துடன் அவளை கட்டிகொண்டான்.
பிறகு ஒவ்வொன்றிலும் அவனது நண்பர்களின் பெயர்களை எழுதினான்.
ஒரு பெரிய அட்டையில் பிறந்தநாள் “கேக்” வரைந்திருந்தது.  அதில் தனது ஆசிரியரின் பெயரை எழுதினான்.
இவ்வழைப்பிதழ்களை எல்லாம் அன்று பள்ளியில் கொடுக்கும் போது அனைவரும் துஷாலாவின் ஆற்றலை அவ்வோவியங்களில் கண்டு வியந்தார்கள்.

மாலை வீட்டிற்கு திரும்பும் போது அவனும் அவன் நண்பர்களும் பிறந்த நாள் விழாவில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சில பந்துகளும், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாட வண்ண சிறுதுணிகளும் வாங்கிக்கொண்டு சென்றான்.

 

இவை அனைத்தையும் துஷாலாவிடம் ஒப்படைத்தான். பாடங்களை படித்துவிட்டு, உணவு உண்டவுடன் மிக்க களைப்புடன் தூங்கிவிட்டான்.
துஷாலா பந்துகளையும் சிறுதுணிகளையும் கொண்டிருந்த பையை  தனது அறையில் இருந்த மேசை மேல் பத்திரமாக வைத்துவிட்டு உறங்கினாள்.
மறு நாள் எழுந்தவுடன் அம்மா அப்பா இருவரும் பீமனை தழுவி முத்தமிட்டனர்.
தாத்தா பாட்டி தொலைபேசியில் அவனை வாழ்த்தி, மாலை விழாவிற்கு வருவதாக சொல்லினர்.
சில நண்பர்களும் வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் கூறினர்.
அம்மாவும் அப்பாவும் சமயலறையில் மாலை விழாவிற்கான  தின்பண்டங்கள் செய்ய தொடங்கினர்.
அம்மா பீமனை கடைக்கு சென்று மாவு, சர்க்கரை, உப்பு, பருப்பு வாங்க அனுப்பினாள்.
பீமன் கடைக்கு செல்லும் முன் அவன் வாங்கிய பந்துகளை எண்ணி ஒரு டப்பாவில் போடுமாறு துஷாலாவை கேட்டுக்கொண்டான்.
அவளும் தூக்க கலகத்துடன் மேசை பக்கம் சென்றால், அங்கு எங்கும் பையை காணவில்லை.
“அம்மா! இங்கிருந்த பந்துகளையும் சிறு துணிகளையும் எங்காவது வைத்தீர்களா?”
“உங்கள் அறை பக்கமே நான் வரவில்லை! அங்கு தான் இருக்கும்! சரியாக தேடு!”

துஷாலா அங்கும் இங்கும் தேடினாள். மேசைக்கு மேல். கீழ். படுக்கை பக்கம். கதவின் பின்னால். எங்கும் அகப்படவில்லை. அவளுக்கு அழுகை வரும் போல இருந்தது.

 

சமையலறை பக்கம் தேடினாள்.
“இங்கெல்லாம் உனது பந்து எப்படி கிடைக்கும்? நீதான் அதை உனது அறையில் எங்காவது பத்திரமாக வைக்கும் எண்ணத்தில், இருக்கும் இடம் தெரியாமல் வைத்துவிட்டுரிப்பாய். அங்கு தேடு!” என்றாள் அம்மா.
“இல்லை! நான் அந்த அறை முழுவதும் தேடிவிட்டேன். அந்த பந்துகள் இருக்கும் பை அங்கு இல்லையே!”
“பீமனிடம் மாட்டிக்கொண்டாய்! அவன் கடையில் இருந்து வந்தவுடன் நன்றாக திட்டுவான்.”
துஷாலா அழ தொடங்கினாள். பீமனும் வீடு திரும்பி விட்டான்.
தங்கை அழுவதை பார்த்து ” துஷாலா நீ ஏன் அழுகிறாய்? நீ தான் எதை கண்டாலும் அஞ்சாதவள் இல்லையா? “
“ஆனால் உன்னை பார்த்தால் பயம் தானே!”
பீமன் எங்கோ சிக்கல் என கண்டுக்கொண்டான்.
“என்னை பார்த்து பயமா? ஏன்?”
துஷாலா பந்துகளும் சிறுதுணிகளும் இருக்கும் பை காணாமல் போனதை பற்றி சொன்னாள்.
“அவ்வாறு எப்படி தொலைந்துபோகும். அதுவும் நமது அறையிலிருந்து…
இரு. சேர்ந்து ஒரு முறை தேடுவோம்.”
இருவரும் அறை முழுதும் தேடினர். பை சிக்கவில்லை.
“ஹ்ம்ம்… இது மர்மம் தான். சற்று யோசிப்போம் பொறு. நீ அம்மாவிற்கு  சீடை செய்ய உதவு.”
துஷாலா சென்றவுடன் பீமன் சற்று நேரம் மேசை பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்து சிந்தித்தான். மேசை பின் இருந்த ஜன்னலிலிருந்து காலை வெய்யில் சற்று அறையினுள் எட்டி பார்த்தது.
பீமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“துஷாலா! இங்கு வா!” என கூக்குரலிட்டான்.
அவளும் ஓடி வந்தாள்.
“இரவு இந்த ஜன்னல்  திறந்திருந்ததா? சிந்தித்து சொல்,” என வினவினான் பீமன்.
“ஆமாம். ஏன்?”
“நமது பந்துகளை யாரோ திருடிக்கொண்டு சென்றிருப்பார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.”
துஷாலா பயத்துடன் “நாம் தூங்கும் போது நமது அறைக்குள் ஒரு திருடன் வந்திருப்பானா?” என்றாள்.
“ஹ்ம்ம்.. இரு கண்டுபிடிப்போம்.”
அவன் தனது புத்தக அலமாரி பக்கம் சென்றான். அங்கு அவனது பேனா பென்சில்களுடன் இருந்த ஒரு சிறிய பூதக்கண்ணாடியை எடுத்தான்.
“துஷாலா! சற்று ஓடி சென்று அம்மாவின் அறையிலிருந்து பவுடர் டப்பாவை எடுத்துவா!”
“எதற்காக?”
“இது துப்பறியும் பீமன் உத்தரவு!” என்றான் பீமன் சிரித்துக்கொண்டு.
ஒரு பச்சை நிற டால்கம் பவுடர் டப்பாவை எடுத்து வந்தாள் துஷாலா.
“அடுத்து. நீ ஓவியம் வரைய உபயோகிக்கும் தூரிகையை கொடு.”
அவள் சிறிய ஒட்டகம் வரைந்திருந்த அவளது தூரிகையை கொடுத்தாள்.
“இப்பொழுது பார்! துப்பறியும் பீமன் நமது கள்வன் யார் என்று கண்டு பிடிக்க போகிறான்!”
துஷாலா மிக்க ஆர்வத்துடன் அவனை பின் தொடர்ந்தாள்.

பீமன் சிறிதளவு டால்கம் பவுடர் எடுத்து மேசை முழுவதும் மெதுவாக பூசினான்.

 

பின்னர் தங்கையின் தூரிகையை கொண்டு மெல்ல மெல்ல பரப்பினான்.
“இப்பொழுது பார்! கள்வனின் கைரேகை மேசை மேல் தெரியும். அகபட்டான் திருடன்!”
ஆனால் மேசை மேல் புலப்பட்டதோ மிக சிறிய வட்டங்கள் மட்டுமே.
“அண்ணா! இவை உண்மையிலயே ஒருவருடைய கைரேகைகளா?”
மேசை முழுவதும் அச்சிறிய வட்டங்கள் பரவியிருந்தன.  பீமனுக்கும் சற்று வியப்பாகவே இருந்தது.
அவன்  பூதக்கண்ணாடி வழியாக அவ்வட்டங்களை கூர்ந்து பார்த்தான்.
“ஹ்ம்ம். எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. ஆனால் எப்படி…ஹ்ம்ம்..”
“என்னது? எப்படி? எனக்கு ஒன்றும் புரியவில்லை,” என்று துஷாலா சலித்துகொண்டாள்.
“பொறுமையாக இரு!”
பீமன் அடுத்து ஜன்னல் பக்கம் சென்று பவுடர் பூசி தூரிகையால் தட்டினான்.
“இங்கு பார். இங்கும் அதே வட்டங்கள்.”
ஜன்னல் வழியாக எட்டி பார்த்தான். ஜன்னலின் கீழ் புல்செடி அடர்த்தியாக இருந்தது.
“வா! வெளியே சென்று ஜன்னலின் கீழ் பார்ப்போம்!”
“எதற்காக?”
பீமன் மெலிதாக சிரித்தான். ஆனால் எதுவும் சொல்லவில்லை.

ஜன்னல் கீழ் வளரும் புல்செடிகளை உற்று கவனித்தான். அவன் தங்கையும், எதுவும் புரியவில்லை என்றாலும் அவன் செய்த வாரே அவளும் செய்தால்.

 

“பார்த்தாயா? அங்கும் இங்கும் சற்று புல்செடி கலைந்துள்ளதை? நாம் நினைத்தது சரிதான். “
“நாம் என்ன நினைத்தோம் அண்ணா?”
“ஹா ஹா! வா, என் பின்னாடி. சத்தமில்லாமல். ஷ்ஷ்ஷ்!”
“திருடன் இங்குதான் இருக்கிறானா?”
“ஆமாம்” என்றான் பீமன் தாழ்ந்த குரலில்.
துஷாலாவிற்கு மிக்க பயமாக இருந்தது. இதயம் பட பட வென அடித்துக்கொண்டது. பீமனின் கையை பிடித்துக்கொண்டாள்.
“பயப்படாதே! என் பின் மெதுவாக வா. அந்த புதரை நோக்கி!”
இருவரும் மெதுவாக வீட்டின் பின் பக்கம் வளர்ந்த ஒரு புதரை நோக்கி சென்றனர்.
புதரினுள் பீமன் குனிந்த வாறு தலையை  விட்டான். துஷாலாவும் அவ்வாரே செய்தாள். மகிழ்ச்சியில் கூவினாள்.
“பை இதோ!” என்றாள்.” இது எப்படி இங்கு வந்தது?”
“திருடன் கொண்டு வந்தான். உனக்கு அவனை பார்க்கவேண்டுமா?”
“வேண்டாம்!”
“அட பயந்தாங்குளி! இந்த பக்கம் சற்று பார்!” என்று பீமன் புதரின் மறு பக்கம் அவளுக்கு சுட்டி காட்டினான்.
“அட! பூனைக்குட்டி!” என்று சந்தோஷமாக கத்தினாள் அவன் தங்கை.
அங்கு ஒரு வெள்ளை நிற பூனைக்குட்டி தூங்கிக்கொண்டிருந்தது. அவள் சத்தம் கேட்டவுடன் எழுந்து  வாலை தூக்கிக்கொண்டு அவள் காலருகில்  சுத்தியது. பார்க்க மிகவும் குட்டியாக அழகாக இருந்தது.
துஷாலா அதை தூக்கிக்கொண்டு கொஞ்சினாள். அது தனது குட்டி தலையை “மியாவ் மியாவ்” என்று சத்தமிட்டுக்கொண்டு செல்லமாக அவளை முட்டியது.
“இதுதான் அந்த பையை திருடியது என்று எப்படி கண்டுபிடித்தாய்?”
“கால் ரேகைகளை கண்டு தான். அதுவுமில்லாமல் சில நாட்கள் முன் ஒரு தாய் பூனை இங்கு சுத்திகொண்டிருந்ததை கவனித்தேன். இரண்டையும் சேர்த்து யோசித்து, திருடியது ஒரு பூனைக்குட்டியாக இருக்கலாம் என்று யூகித்தேன். ஜன்னல் வழியாக இது நேற்று இரவு நமது அறையில் குளிருக்காக வந்து தூங்கியிருக்க வேண்டும். பிறகு பந்துகளுடன்  விளையாடிவிட்டு பையை புதருக்கு எடுத்து கொண்டு சென்றுவிட்டது.”
துஷாலா, பூனைக்குட்டியை பார்த்து “இவ்வளவு விஷமம் செய்துவிட்டு பசிகிறதா உனக்கு? வா கிண்ணியில் பால் ஊற்றி தருகிறேன்.”
அதை எடுத்துக்கொண்டு சமையலறை சென்றாள்.
அம்மா “எங்கிருந்து இதை பிடித்துகொண்டு வந்தாய்! உடனே போய் இதை வெளியே விடு. கைகளை அலம்பு!” என்று கத்தினாள்,
இதை எதிர்பார்த்திருந்த துஷாலா  அவள் யோசித்து வைத்திருந்த உத்தியை கையாண்டாள்.
“ஆனால் அம்மா நான் இதை பீமனின் பிறந்தநாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளேன்.
அண்ணா! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!” என்று பூனைக்குட்டியை அவனிடம் கொடுத்தாள்.
பீமன் வாய் விட்டு சிரித்தபடி பூனைக்குட்டியை வாங்கிகொண்டு, “இனி இந்த திருட்டு பூனைக்குட்டி இங்கு இருக்கட்டுமா?” என்று அம்மாவிடம் கேட்டான்.
அம்மாவும் சிரித்தபடி சரி என தலையாட்டினாள்.

பீமனின் பிறந்தநாள் பரிசு அவனை சற்றே செல்லமாக முகத்தில் நக்கியது.

 

துஷாலா கிண்ணத்தில் அதற்கு பால் வைத்ததும் தாவி சென்று அதை குடித்தது. அடுத்து என்ன விஷமம் செய்யலாம் என்று சிந்திபாதை போல் அதன் கண்கள் ஜொலித்தன.

“உன்னை போலவே குறும்பான ஒரு பரிசு கொடுத்தாய்!” என்று தங்கையை பார்த்து சொல்லியபடி சிரித்தான் பீமன்.

 

 

Tanjore – chola’s architecture

தமிழக வரலாற்றில், பொற்காலம் எனப் போற்றப்படும் சோழர் வரலாற்றில், மாமன்னன் ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறான். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் அவன்.அருள்மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடிசோழன், சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற, பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான்.


“”செந்திரு மடந்தை மண் ஸ்ரீராஜராஜன் இந்திர சமானன் இராஜசர் வக்ஞன்,” என்று, திருக்கோயிலூர் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது.ஐப்பசி மாதம் சதய நாளில் ராஜராஜன் பிறந்தான். அவனது பிறந்த நாளான ஐப்பசி சதய நாளில் திருவெண்காடு, திருப்புகலூர், எண்ணாயிரம், திருவிடந்தை, திருநந்திக்கரை, கோபுரப்பட்டி (பாச்சூர்) போன்ற பல கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்க, தானம் அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்!


தஞ்சைப் பெரிய கோவிலில் சதயத்திருவிழா, 12 நாட்கள் சிறப்பாக நடந்ததை, அக்கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்நாட்களில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீரில் ஏலக்காய், செண்பக மொட்டுகள் போடப்பட்டு, மிகுந்த நறுமணத்துடன் அபிஷேகம் செய்யப்பட்டது.ராஜராஜ சோழனால் பலத் திருக்கோவில்கள் கட்டப் பெற்றன. அவற்றில், தஞ்சைப் பெரிய கோவில் தலைச்சிறந்த, ஒப்பற்ற கோவிலாகத் திகழ்கிறது.

15 BEST HISTORICAL HERITAGE SITES IN TAMILNADU

 

At a distance of 217 km from Chennai, 189 km from Kanchipuram, 43 km Cuddalore, 66 km from Pondicherry, 43 km Mayiladuthurai, 85 km from Nagapattinam, 303 km from Madurai and 173 km from Trichy, Chidambaram is a pilgrimage town in Cuddalore district in the state of Tamil Nadu. Well known for Nataraja Temple, Chidambaram is one of the most ancient and most celebrated shrines in South India.

Chidambaram is also known as Thillai. The name Chidambaram comes from the Tamil word Chitrambalam which means the small hall or stage of wisdom. According to legend, it was once a forest of thillai, a mangrove species of trees. There was once a small shrine on the banks of a tank. The saints…..

Kanchipuram

 

At a distance of 75 km from Chennai, 68 km from Vellore, 108 km from Tirupati & 127 km from Pondicherry, Kanchipuram or Kanchi is one of the most famous pilgrimage sites in South India. It is a temple town and the headquarters of Kanchipuram district. Kanchipuram is one of the most popular weekend getaways from Chennai and one of the major pilgrimage sites in Tamilnadu.

Kanchipuram has rich history and it’s one of the oldest cities in India. The temples of Kanchipuram are known for their grandeur and great architecture. The architecture of Kanchi monuments were trendsetting with great sculpture work and unique style and became a benchmark for South Indian architecture.

Mahabalipuram

 

At a distance of 57 km from Chennai, 65 km from Kanchipuram, 96 km from Pondicherry, 420 km from Madurai and 290 km from Trichy, Mahabalipuram (also called Mamallapuram) is situated in Kanchipuram district in the state of Tamil Nadu. It is famous for its shore temples built in 7th century. Mahabalipuram is one of the must visit weekend getaways from Chennai for one day trip and also a major historical / heritage site in Tamilnadu.

This UNESCO World Heritage Site was the second capital of the Pallava kings of Kanchipuram. It is an ancient historic town and was a bustling seaport during Pallava kings in 7th Century AD. According to the legend, it has been named after the demon king…..

Madurai

 

At a distance of 464 km from Chennai, 136 km from Trichy, 169 km from Thanjavur, 170 km from Rameswaram, 114 km from Kodaikanal & 209 km from Coimbatore, Madurai is the third largest city in Tamilnadu and one of the most famous centers of pilgrimage in India and also the prime site of heritage in Tamilnadu. The city is very well known for Madurai Meenakshi Temple.

Situated on the banks of the River Vaigai, Madurai is also referred to as Athens of the East and Temple Town. Madhurai is the oldest continually inhabited city in the Indian peninsula, with a history dating all the way back to the Sangam period of the pre-Christian era. It has been inhabited since at least the 3rd century…..

Thanjavur

 

At a distance of 56 km from Trichy, 112 km from Chidambaram, 86 km from Nagapattinam, 170 km from Madurai, 326 km from Chennai, Thanjavur, also known as Tanjore, is a city and district headquarters in the state of Tamil Nadu. Thanjavur is famous for the Brihadeeswarar Temple built by Rajaraja Chola in the year 1010 AD. Also known as the Big Temple, it is one of UNESCO World Heritage Sites and among most important heritage sites in India.

Situated on the banks of River Cauvery, Thanjavur has a rich historical heritage and is a prism of ancient as well as the modern south Indian civilizations. The city was once the stronghold of the historic Cholas and at one time was also the capital…..

Vellore

 

At a distance of 142 km from Chennai, 70 km from Kanchipuram and 106 km from Tirupati, Vellore is a popular and one of the oldest cities of South India. It is the administrative headquarters of Vellore district in Tamil Nadu situated on the banks of Palar River. Vellore along with Sripuram is among popular weekend getaways from Chennai for a 2 day tour and it is a major historical site in Tamilnadu.

Vellore is popularly known as the Fort City of Tamil Nadu. Now a very calm and understated place, it was once a battleground and has seen many wars. The name Vellore also means a City of Spears. Vellore has an enriching legacy reflecting the early Dravidian culture. It has been ruled by…..

Gangai Konda Cholapuram (Near Chidambaram)

At a distance of 42 km Chidambaram, 76 km from Thanjavur, 110 km from Trichy & 268 km from Chennai, Sri Brihadeeswara Temple is situated at Gangaikonda Cholapuram. Gangaikonda Cholapuram was the capital of Cholas. It was built by Rajendra Chola I, the son and successor of Rajaraja Chola, who conquered a large area in South India at the beginning of the 11th century. It occupies an important place in the history of India as the capital of the Cholas from about 1025 CE for about 250 years. This temple is part of the UNESCO World Heritage Site ‘Great Living Chola Temples’.

Rajendra Chola I has established this temple after his great victories in Northern India. He was originally called…..

Arunachala Temple – Tiruvannamalai (Near Kanchipuram)

 

At a distance of 120 Kms from Kanchipuram, 195 Kms from Chennai, 204 Kms from Bangalore and 83 Kms from Vellore, the famous Arunachala Temple in Thiruvannaamalai is one of the greatest Shaiva temples in South India. Tiruvannamalai along with Gingee Fort is one of the ideal Chennai weekend getaways and a major pilgrimage site in Tamilnadu.

Built within an area of 25 acres, this temple was constructed by Vijayanagara kings between 16th and the 17th centuries. This temple is famous for its huge & massive gopurams built on four sides of the temple. The Rajagopuram on East Gateway is 217 feet high with 11 storeys. The base measure 135 feet by 98 feet. This tower was built by King Krishna…..

Padmanabhapuram (Near Kanyakumari)

 

At a distance of 35 Kms from Kanyakumari, 53 Kms from Trivandrum & 700 Kms from Chennai (situated on Trivandrum – Kanyakumari road), Padmanabhapuram is an ancient historical town surrounded by a fort with an area of 187 acres. The ancient capital of Travancore might be constructed before AD 1601. The palace with an area of seven acres, is situated in the very centre on the Padmanabhapuram Fort, amidst hills, dales and rivers.

The fort which was built with mud originally was dismantled and reconstructed with granite by Maharaja Marthanda Varma. The height of the walls varies from 15 ft to 24 ft according to the inclination of the ground.

Entry Fee Rs 25 for Adult & Rs…..

Darasuram Airavatheswar Temple (Near Thanjavur)

 

At a distance of 34 Kms from Thanjavur & 284 Kms from Chennai, Darasuram, a small town 8 Kms away from Kumbakonam is known for the Airavathesvara Temple built by Rajaraja Chola II in the 12th century CE. This temple is part of the UNESCO World Heritage Site ‘Great Living Chola Temples’.

This temple is a storehouse of art and architecture. The vimana is 85 feet high. The front mandapam itself is in the form of a huge chariot drawn by horses. The temple has some exquisite stone carvings. The main deity’s consort Periya Nayaki Amman temple is situated adjacent to Airavateshwarar temple.

The legend goes to show that Airavata, the white elephant of Indra, worshipped Lord Siva in…..

Thirumalapuram Rock-Cut Cave Temples (Near Tenkasi)

 

At a distance of 1 km from Thirumalapuram Bus Stop, 24 km Tenkasi and 62 km from Tirunelveli, The rock cut cave temples are situated on the hill of Thirumalapuram also known as Varanasimalai in Sankarankovil Taluk of Thirunelveli District. These ancient Cave temples are now under the protection of Archaeological Survey of India.

There are two rock cut cave temples which are excavated by Pandyan Kings in 750 AD. Among the two caves one is finished and other is unfinished. The finished one is more significant with rectangular ardha-mandapa with a flight of steps and cells on the western walls. It contains bas-relief sculptures and two inscriptions from Pandyan period.

Malayadipatti Rock-Cut Temples (Near Tiruchirappalli)

 

At a distance 42 km from Pudukkottai, 36 km from Trichy, 39 km from Thanjavur & 363 from Chennai, The Malayadipatti Rock-Cut temples are situated on granite hillocks, south of the Malayadipatti village, also known as Thiru Valattur Malai.

There are two temples in Malayadipatti, one for Lord Shiva and the other for Lord Vishnu. Both temples are situated on the same hillock. Built in 8th century by Pallavas, the Shiva temple is older than the Vishnu temple. Constructed by Kuvavan Sathan, the Shiva temple is named as Vakeeswarar, according to epigraphic notes. This temple, popularly known as Alathurthali is situated towards the eastern side of the granite hill.

Sri Ranganathaswamy Temple – Srirangam (Near Tiruchirappalli)

 

At a distance of 1 km from Srirangam Railway Station, 9 km from Trichy Railway Junction, 62 km from Thanjavur, 145 km from Madurai & 327 km from Chennai, Srirangam is well known for Sri Ranganathaswamy Temple which is the foremost of the eight self-manifested shrines of Lord Vishnu. The temple is also considered the first among 108 prominent Vishnu temples.

Sri Ranganathaswamy Temple is one of the most famous temples in South India, constructed in the Dravidian style of architecture. Built across an area of 156 acres, this temple is dedicated to Ranganatha, a reclining form of Hindu deity, Lord Vishnu. This temple lies on an island formed by the twin Rivers Cauvery and Kollidam……

Gingee Fort (Near Vellore)

 Adventure / Trekking |  Historical & Heritage

At a distance of 2 km from Gingee Bus Stand, 71 km from Puducherry, 85 km from Kanchipuram and 93 km from Vellore, Gingee Fort or Senji Fort in Villupuram District is one of the largest surviving forts in Tamil Nadu. The fort was historically considered most impregnable and it was called the ‘Troy of the East’ by the British. The fort is one of the prominent tourist places to visit near Villupuram & Chennai also among the best weekend getaways from Chennai & Pondicherry for a day trip.

Originally the site had a small fort built by the Chola dynasty during 9th century. Gingee Fort, also known as Chinji or Jinji, was modified by Kurumbar while fighting the Cholas and again by the…..

Margabandeswarar Temple – Virinjipuram (Near Vellore)

 At a distance of 650 m from Virinjipuram Bus Stop and 13 km from Vellore Town Railway Station, Sri Margabandeswarar Temple is a 13th century temple situated on Bangalore – Chennai National Highway. The temple has rich sculptures and artistic pillars. The temple was built by Cholas Kings in 13th Century while Bomma Nayakars, who built Vellore Jalagandeswarar temple, made several extensions to the temple including beautiful kalyana mandapa.

The main deity of this temple is Swayambu Lingam known as Margabandeeswarar. The Siva Lingam is slightly leaning to North East direction. The Goddess of the temple is Maragadambal. Other deities seen in the temple are Ganapathy, Subramanya, Chandra…..

கோஹினூர் வைரம்: வரலாறும் மர்மமும்

தோற்றம்:

இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதி தான் கோஹினூரின் பிறப்பிடம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குண்டூரில் மாவட்டத்தில் இருக்கும் கொல்லூர் என்ற பகுதி தான் கோஹினூர் பிறந்த இடம்.

வைரமனாது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது. இந்த சண்டைகளுக்கு இடையில் இது சிறிது பாழாகிப் போனது என்று கூறப்படுகிறது.

தொடரும் மர்மம்

கோஹினூர் வைரத்தை வைத்திருக்கும் அரசர்கள் அவர்களது மகுடத்தையும் ஆட்சியையும் இழப்பார்கள் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் சாபக் கேடு. அதே போல, வரலாற்றில் கோஹினூர் வைரத்தை கைப்பற்றிய மன்னர்கள் எல்லாம், போர்களில் தோல்வியுற்று அல்லது வேறு காரணங்களால் தங்களது மகுடத்தை இழந்துள்ளனர்.

ஆண்களை தொடரும் சாபம்

இந்த கோஹினூர் வைரத்தின் சாபம் எனப்படும் மர்மம் ஆண்களை மட்டுமே பின் தொடர்வதாக கூறப்படுகிறது. அதனால் தான் கடைசியில், இந்த கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் பெண்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் தான், இப்பது விக்டோரியா, எலிசபெத் போன்ற ராணிகளின் கைமாறி வருகிறது கோஹினூர் வைரம்.

விக்டோரயாவை சேர்ந்த விதம்

கடந்த 1877ஆம் ஆண்டு இந்தியாவின் அரசியாக விக்டோரியா அறிவிக்கப்பட்ட போது, கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் அரசின் ஆபரணங்களின் ஓர் பகுதியாக மாறியது.

kohinoor queen

ஆந்திராவிலிருந்து அலாவுதீன் கில்ஜி எனும் மன்னனின் தளபதி மாலிக் கபூரால் கைப்பற்றப் பட்டது. இங்கிருந்து தான் கொஹினூரின் நாடோடி வாழ்க்கை ஆரம்பமானது. பின்னர் இந்த வைரம் குவாலியர் மன்னர் விக்ரம் ஜித்தின் கைகளுக்கு சென்றது.

Continue reading கோஹினூர் வைரம்: வரலாறும் மர்மமும்

Top 10 Most Beautiful Royal Palaces in World

palace is a grand residence, especially a royal residence or the home of a head of state or some other high-ranking dignitary, also homes of kings and emperors. These splendid palaces are among the Most Famous  Monuments in the World.

These amazing monuments were once the homes of kings and emperors, now popular tourist attractions. Here is a list of top 10 most beautiful royal palaces in the world.

10. Pena National Palace

Royal Palaces
Beautiful Royal Palaces – Pena National Palace

The Pena National Palace is a Romanticist palace in Portugal, Built in 1842 by King Ferdinand II. The palace was constructed on the ruins of a monastery severely damaged in the Great Lisbon Earthquake of 1755. Today, with it original colors of red and yellow restored, the Pena National Palace is one of Portugal’s most visited monuments.

9. Mysore Palace

Mysore Palace
Mysore Palace – The Most Beautiful Royal Palaces

Also known as Amba Vilas Palace, is a palace situated in the city of Mysore in southern India. It is the official residence of the Wodeyars – the erstwhile royal family of Mysore, and also houses two durbar halls (ceremonial meeting hall of the royal court). Mysore is commonly described as the City of Palaces, Mysore in India has a number of historic palaces of which Mysore Palace is the most famous one. Mysore palace is now one of the most famous tourist attractions in India after Taj Mahal with more than 2.7 million visitors.

8. Schönbrunn Palace

Schönbrunn Palace
The Most Beautiful Royal Palaces – Schönbrunn Palace

One of the most important cultural monuments in the country, since the 1960s it has been one of the major tourist attractions in Vienna. Schönbrunn Palace is a former imperial 1,441-room Rococo summer residence in modern Vienna, Austria. The palace was built between 1696 and 1712 at the request of Emperor Leopold I. The Palace Park offers a lot of attractions, such as the Privy Garden, the oldest zoo in the world, a maze and labyrinth, and the Gloriette (a marble summerhouse) situated on top of a 60 meter high hill.

7. Summer Palace

Summer Palace
The Most Beautiful Royal Palaces – Summer Palace

The Summer Palace is a palace in Beijing, China. The Summer Palace is mainly dominated by Longevity Hill and the Kunming Lake. It covers an expanse of 2.9 square kilometres, three quarters of which is water. This place was used as a summer residence by China’s imperial rulers – as a retreat from the ‘Forbidden City’. The gardens were substantially extended in 1750, reproducing the styles of various palaces and gardens from around China. Kunming Lake was extended to imitate the West Lake in HangZhou.

6. Palace of Versailles

Palace of Versailles
The Most Beautiful Royal Palaces – Versailles Palace

The Palace of Versailles is a royal château in Versailles in the Île-de-France region of France. Versailles was originally a hunting lodge, built in 1624 by Louis XIII. When the château was built, Versailles was a country village; today, however, it is a wealthy suburb of Paris, some 20 kilometres southwest of the French capital.

5. Château de Chambord

Château de Chambord
The Most Beautiful Royal Palace – Château de Chambord

The royal Château de Chambord at Chambord, Loir-et-Cher, France, is one of the most recognizable châteaux in the world because of its very distinct French Renaissance architecture which blends traditional French medieval forms with classical Renaissance structures. The building was constructed by King François I.

4. Buckingham Palace

Buckingham Palace
Buckingham Palace – The Most Beautiful Royal Palace

Originally known as Buckingham House is the official London residence and principal workplace of the British monarch. Located in the City of Westminster, the palace is a setting for state occasions and royal hospitality. It has been a focus for the British people at times of national rejoicing and crisis.

3. Alhambra

Alhambra Palace
The Most Beautiful Royal Palace – Alhambra

Alhambra is a palace and fortress complex located in Granada, Andalusia, Spain. It was originally constructed as a fortress in 889, and was converted into a royal palace in 1333 by Yusuf I, Sultan of Granada. The Alhambra’s Islamic palaces were built for the last Muslim Emirs in Spain and its court, of the Nasrid dynasty. After the reconquest by the Reyes Católicos in 1492, some portions were used by the Christian rulers. The Alhambra is now one of Spain’s major tourist attractions and many visitors come to Granada just to see the Alhambra.

2. Potala Palace

Potala Palace
Most Beautiful Royal Palaces – Potala Palace

The Potala Palace is located in Lhasa, Tibet Autonomous Region, China. Situated on Marpo Ri hill, 130 meters above the Lhasa valley, the Potala Palace rises a further 170 meters and is the greatest monumental structure in all of Tibet. Although a palace was already built here in the 7th century the construction of the present palace began in 1645 during the reign of the fifth Dalai Lama and by 1648 the Potrang Karpo, or White Palace, was completed. The Potrang Marpo, or Red Palace, was added between 1690 and 1694. The Potala Palace remained the residence of the Dalai Lama until the 14th Dalai Lama fled to India, after the Chinese invasion in 1959.

1. Forbidden City

Forbidden City
Most Beautiful Royal Palaces – Forbidden City

One of the most Beautiful Royal Palaces. Built in 1406 to 1420, The Forbidden City was the Chinese imperial palace from the Ming Dynasty to the end of the Qing Dynasty. It is located in the middle of Beijing, China, and now houses the Palace Museum. For almost 500 years, it served as the home of emperors and their households, as well as the ceremonial and political center of Chinese government. The complex consists of 980 buildings and covers 720,000 Squar meter.The palace complex exemplifies traditional Chinese palatial architecture and has influenced cultural and architectural developments in East Asia and elsewhere.

விவசாய தகவல்கள்

பசுமை தமிழகம் 

இயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்.
வயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு கலந்த உணவைப் பெற வேண்டி உள்ளது. ரசாயன உரங்களால் வயல்கள் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.

எனவே ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றைத் தவிர்த்து,  இயற்கை வழி வேளாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் உருவாகி உள்ளது.

நீர் வளங்களைப் பாதுகாத்து மாசற்ற நீரைத் தக்க வைத்தல், இயற்கைச் சூழல் மாசுபடாமல் காத்தல், உணவு நஞ்சாவதைத் தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் கேடு ஏற்டாமல் தடுத்து, ரசாயன உரங்களைத் தவிர்த்து சாகுபடி செய்வதே இயற்கை வளாண்மை ஆகும்.

இயற்கை வழி வேளாண்மைக்கு மிகவும் அவசியமான இயற்கை உரங்கள் வ கையையும், அவற்றைத் தயாரிக்கும் முறையையும் காண்போம்.

கம்போஸ்ட் உரம்: பண்ணைக் கழிவுகளில் இருந்தும், இலை, சருகு மற்றும் குப்பைகளில் இருந்தும் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்துகளைப் பயன்படுத்தி, ஒரு மாதத்துக்குள் மக்க வைத்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது.

தென்னை நார் கம்போஸ்ட் உரம்: தென்னை நார்களில் 50 சதவீதத்திற்கு மேல் லிக்னின் மற்றும் செல்லுலோஸ் உள்ளது. தென்னை நார்களுடன் புளுரோட்டஸ் காளான் வகையைச் சேர்த்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

தொழு உரம்: இரு மாடுகள் வைத்திருக்கும் விவசாயி, ஓராண்டில் 6 டன் தொழு உரம் தயாரிக்கலாம். மாட்டுச் சாணத்தை விட மாட்டின் சிறுநீரில்தான் தழைச்சத்து அதிகம் உள்ளது. எனவே மாட்டுக் கொட்டகையில் மண் பரப்பி, மாடுகள் தின்று  கழித்த வைக்கோலை அதில் பரப்பி, அவற்றில் மாட்டை சிறுநீர் கழிக்கும்படி செய்து, அதைச் சேகரித்து மக்க வைத்து இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

பிண்ணாக்கு உரம்: ஆமணக்கு, நிலக்கடலை, எள், பருத்தி, தேங்காய், புங்கன், இலுப்பை, வேப்பங்கொட்டை ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்டும் பிண்ணாக்குகளைக் கொண்டு இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது.

பசுந்தாள் உரம்: தக்கைப் பூண்டு, சணப்பு, கொழுஞ்சி, மணிலா, அகத்தி,நரிப்பயறு முதலியவற்றைப் பயன்படுத்தியும், மரம், செடி, கொடி ஆகியவற்றின் தழை களைப் பயன்படுத்தியும் இந்த வகை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த உரம் தழைச் சத்தாகவும், மக்குச் சத்தாகவும் பயன் ஆகி, நுண்ணுயிர்களைச் செயல் திறன் பெறச் செய்கிறது.

மண்புழு உரம்: ஆடு, மாடு கழிவுகள் மற்றும் வீடு, தோட்டக் கழிவுகளை பள்ளத்தில் குவித்து, அதில் மண் புழுக்களை இட்டு மக்கச்செய்து இந்த உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வகை உரத்தால் பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், தாமிரம், கந்தகம் போன்ற உலோகச் சத்துகளும் கிடைக்கின்றன. பயிர் சாகுபடி வரையிலும் இந்த சத்துகள் பயன்படுகின்றன. இதுதவிர பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஜிம்ரலின், சைட்டோகனிஸ் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளும் கிடைக்கின்றன.

 

 

பூண்டு கழிவுகளில் இயற்கை உரம்

பெரியகுளம் பகுதியில் குப்பைக்கு போகும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை, இயற்கை உரமாக்கி, விவசாயிகள் மகசூலை அதிகரிக்கின்றனர்.

வடுகபட்டி, தாமரைக்குளம் பகுதிகளில் தொடர்ந்து ரசாயண உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலங்கள், ஐந்தாண்டுகளுக்கு பிறகு வளம் குறைந்து விளைச்சல் பாதிக்கிறது. அதன் பிறகு விவசாயிகள் மண்பரிசோதனை செய்து மண்ணின் வளத்தை அதிகப்படுத்த சிரமப்படுகின்றனர்.

garlic

 

 

 

 

இதை தவிர்க்க, விவசாயிகள் மண்ணை உழுது இயற்கை உரங்களான மாட்டுசாணம், புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றை போட்டு, சணம்பு உள்ளிட்ட கீரைச்செடிகளை பயிர் செய்கின்றனர். இத்துடன் இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி, அதிகளவு விளைச்சல் பெறுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி தனபால் கூறுகையில், “”பூண்டின் அனைத்து பகுதிகளும் மக்களுக்கு பயன்படுகிறது. இலவசமாக கிடைக்கும் வெள்ளைப்பூண்டு கழிவுகளை சேகரித்து, நிலத்தில் கொட்டி உழுகும் போது, மண்ணில் தீங்கு விளைவிக்கும் வேர்புழுக்கள் சாகுகின்றன. மண்ணின் வளமும் அதிகரிக்கிறது. இதனால் வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கிறது,” என்றார்.

இயற்கை உரமாகும் பார்த்தீனியம்

கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

1_2168806f

இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது.

மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்படியே இயற்கை உரமாக மாற்றலாம் என்கின்றனர் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஜெயம் பிராணி நல அறக்கட்டளை நிர்வாகிகள்.

இது குறித்து அதன் நிர்வாக இயக்குநர் கே.வி.கோவிந்தராஜ் கூறியதாவது:

 • முதலில் 6 அடிக்கு 4 அடி அளவுள்ள (தேவைக்கேற்ப நீள அகலங்களை மாற்றிக் கொள்ளலாம்.) 4 அடி ஆழத்திற்கு குழி தோண்டி, அதில் வேருடன் பிடுங்கிய பார்த்தீனியச் செடிகளை போட வேண்டும்.
 • அத்துடன் கொழுஞ்சி, எருக்கன் இலை, வேப்பிலை மற்றும் கிடைக்கும் இலை தழைகளையும் கலந்து போட்டு இரண்டடி உயரத்திற்கு நிரப்பி, நன்கு மிதித்து அதன் மேல் சாணி மற்றும் கோமியக் கரைசல் தெளிக்க வேண்டும்.
 • அதன் மேல் மூன்று அங்குல அளவிற்கு மண் போட்டு, மீண்டும் இதே மாதிரி மூன்று நான்கு அடுக்குகள் போட்டு, மேலே மண் போட்டு மீண்டும் மூடி வைத்தால் ஓரிரு மாதங்களில் அற்புதமான இயற்கை உரம் தயாராகிவிடுகிறது.
 • இதில் மற்ற உரங்களில் கிடைப்பதை விட நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது.
 • பயிர்களுக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்துக்களும் அதிக அளவில் இருப்பதால் பயிர்களின் மகசூல் அதிகரிக்கும்.
 • தென்னை, மா, எலுமிச்சை மரங்களுக்கு இடையில் 2அடிக்கு 2 அடி 2 அடி குழி வெட்டி அதில் பார்த்தீனியம் மற்றும் சாணிக் கரைசல் உள்ளிட்டவற்றை போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு மாதத்தில் அவை மக்கி விடும். மரத்தின் வேர்கள் அந்த உயிர்ச் சத்தை கிரகத்துக் கொண்டு நன்கு செழித்து வளர்வதுடன் அதன் காய்ப்புத் திறன் அதிகரிக்கும்” என்றார் அவர்.

பார்த்தீனியம் சிலருக்கு அலர்ஜி உண்டாக்கும். அவர்களுக்கு மூச்சி திணறல், தோல் பிரச்னைகள், தும்மல், ஜுரம்  வரலாம். உங்களக்கு இந்த பிரச்னை இருந்தால் பார்த்தீனியம் அருகே செல்லாதீர்கள். இந்த அலர்ஜி இல்லாதவர்களிடம் கூறி செடிகளை பிடுங்க சொல்லுங்கள்

மண்புழு உரம் தயாரித்தல்

பழங்காலத்தில் விவசாயமானது இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி செய்யப்பட்டு வந்தது.இதனால், நிறைவான உற்பத்தி அடைந்ததோடு மண்ணின் வளமும் பாதுகாக்கப்பட்டது.ஆனால் இன்றைய சூழலில் பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பசுமைப்புரட்சியின் காரணமாக அதிக விளைச்சல் தரக் கூடியதும், இரசாயன உரங்களால் கூடுதல் பயன் தரக் கூடியதுமான ரகங்கள் உருவாக்கப்பட்டன.

ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகளின் அதிகமான பயன்பாட்டினால் மண்ணின் வளம் குறைந்ததோடு மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியது.

எனவே இத்தகைய தரம் குறைந்த வளமற்ற நிலங்களை வளமான நிலங்களாக மாற்றுவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மண்புழு உயிர் உரமானது இயற்கை உரங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இயற்கையில் கிடைக்கக் கூடிய கழிவுகளை உணவாக உட்கொண்டு குடலில் உள்ள நுண்ணுயிர், நொதிகளால் மண் புழுக்கள் மூலம் செரிக்கப்பட்டு சிறு சிறு உருண்டைகளாக மலப்புழை வழியாக வெளித்தள்ளப்படும் கட்டிகளே மண்புழு உரம் எனப்படுகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்க வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) பெ. முருகன் மண் புழு உரத்தின் பயன்பாடுகள் மற்றும் மண் புழு உற்பத்தி குறித்து கூறியது:

மண்புழு உரத்தின் பயன்கள்:

 • நிலத்தின் அங்ககப் பொருள்களின் அளவு, நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. மண்ணின் நீர்ப் பிடிப்பு சக்தி, காற்றோட்டம், வடிகால் வசதியை அதிகரிக்கிறது. தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, நுண்ணுட்டச் சத்துக்களின் பயன்பாட்டை அதிகரிக்கிறது.
 • பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனயீன், ஆக்ஸின், பலவகை நொதிகள் உள்ளன.
 • மற்ற மட்கும் உரங்களை விட மண்புழு உரத்தில் சத்துகள் அதிகம். இது வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
 • செழிப்பான பயிர் வளர்ச்சி, அதிக மகசூல் எடுக்க வழி வகை செய்யும். கழிவுகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பதால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.
 • மண் புழு உரம் தயாரிப்பதைத் தொழிலாக மேற்கொள்வதால் வருமானம், வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

தொட்டி முறையில் மண்புழு உர உற்பத்தி:

 

Eisenia fetida

            உற்பத்தி செய்யும் இடமானது நிழலுடன், அதிகளவு ஈரப்பதம்,                                 குளிர்ச்சியானப் பகுதியாக இருக்க வேண்டும்.
 • அதாவது உபயோகப்படுத்தாத மாட்டுத் தொழுவம், கோழிப் பண்ணை, தென்னைக் கீற்று கூரை உள்ள இடத்தைப் பயன்படுத்தலாம்.
 • தொட்டி கட்டமைப்பானது 6 அடி நீளமும், 3 அடி அகலமும், 3 அடி உயரமும் இருக்குமாறு தயார் செய்து கொள்ள வேண்டும்.
 • தொட்டியின் அடிபாகத்தில் 3 செ.மீ. உயரத்துக்கு தென்னை நார்க் கழிவு (அல்லது) கரும்பு சோகை (அல்லது) நெல் உமி போட வேண்டும்.
 • இந்தப் படுக்கையின் மேல் 2 செ.மீ. உயரத்துக்கு வயல் மண்ணைப் பரப்ப வேண்டும். பாதி மட்கிய பண்ணைக் கழிவுகளை (பயிர்க் கழிவு, தழைகள், காய்கறி கழிவு, வைக்கோல்) 50 சதவீதம் கால்நடைக் கழிவுடன் (மாட்டு எரு, ஆட்டு எரு, சாண எரிவாயுக் கழிவு) கலக்க வேண்டும்.
 • இக்கலவையை, தொட்டியில் 2 அடி உயரத்துக்குப் நிரப்ப வேண்டும். தொட்டியில் கழிவுகளின் மேற்பரப்பில் 2 கிலோ ஆப்ரிக்கன் மண்புழுவை விட வேண்டும்.
 • தினமும் 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்க வேண்டும். தொட்டியை தென்னை கீற்றுகள் மூலம் முடி வைக்கவும்.
 • 60 நாள்களுக்குள் மண்புழு உரம் தயாராகிவிடும். மண்புழு உர அறுவடையானது மண்புழு உர படுக்கையின் மேல் உள்ள மண்புழுக் கழிவுகளை மட்டும் அறுவடை செய்ய வேண்டும்.
 • ஒரு கிலோ மண் புழு உர உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ 1.50.

மண் புழு குளியல் நீர் உற்பத்தி செய்தல்:

 

 

manpuzhu2

 • பெரிய மண்பானை (அ) பிளாஸ்டிக் பேரல்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
 • பேரல்களின் அடிபாகத்தில் 10 செ.மீ. உயரத்தில் கூழாங்கற்கள், மணல் நிரப்ப வேண்டும். இதில் நன்றாக மட்கிய பண்ணைக் கழிவுகள், மாட்டு எருவை பேரல்களில் மேல் பகுதிவரை நிரப்ப வேண்டும்.
 • இதன் மேல் பகுதியில் 500 மண்புழுக்களை விட வேண்டும். பிறகு பேரல் மேல் பகுதியில் ஒரு வாளியை வைத்து தொடர்ந்து சொட்டு சொட்டாக தண்ணீர் விழுமாறு பார்த்துக் கொள்ளவும்.
 • தினமும் 4-5 லிட்டர் நீர் வாளியில் ஊற்றப்பட வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு தினமும் 3 -4 லிட்டர் வரை உற்பத்தி செய்யலாம்.
 • 1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 10 லிட்டர் நீரில் கலந்து அனைத்து வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக தெளிக்கலாம், 1 லிட்டர் மண்புழு குளியல் நீரை 1 லிட்டர் மாட்டு கோமியத்துடன் கலந்து பூச்சி விரட்டியாக பயிர்களுக்கு தெளிக்கலாம்.
 • மண் புழுவை உற்பத்தி செய்தல்: மண் பானையில் சிறிய துளை இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
 • இதில் ஒரு பங்கு காய்ந்த இலைகள், ஒரு பங்கு மட்கிய மாட்டுச் சாணம் (1:1) போட வேண்டும்.
 • 10 கிலோ மட்கிய எருவுக்கு 50 புழுக்கள் வீதம் மண் பானையில் விட வேண்டும். இந்த மண் பானையை ஈரக்கோணிப்பைப் போட்டு மூடி வைக்க வேண்டும். நிழலான இடத்தில் மண்பானையை வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
 • 50 – 60 சதவீதம் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். 50 – 60 நாட்களில் 50 லிருந்து 250 மண்புழுக்களை பெருக்கலாம்.

மண்புழு உரத்திலுள்ள சத்துப் பொருள்களின் அளவு:

 • மண்புழு உரத்தின் ஊட்டச்சத்து அளவு நாம் பயன்படுத்தும் கழிவுப் பொருள்களை பொருத்தே அமைகிறது.
 • பொதுவாக மண் புழு உரத்தில் 15-21 சதவீதம் அங்கக கார்பன், 0.5-2 சதவீதம் தழைச்சத்து, 0.1-0.5 சதவீதம் மணிச்சத்து, 0.5-1.5 சதவீதம் சாம்பல் சத்து உள்ளது.
 • மேலும் இரும்பு, துத்தநாகம், சோடியம், கால்சியம், மாங்கனீசு சத்துகளும் ஊட்டச்சத்து பி மற்றும் சைட்டோகைனின், ஆக்ஸின் போன்ற பயிர் ஊக்கிகளும் இருக்கின்றன.

மண்புழு உரம் – பரிந்துரைகள்

 • நெல், கரும்பு, வாழை – 2000 கிலோ ஏக்கர்
 • மிளகாய், கத்தரி, தக்காளி – 1000 கிலோ ஏக்கர்
 • நிலக்கடலை, பயறுவகைகள் – 600 கிலோ ஏக்கர்
 • மக்காச்சோளம், சூரியகாந்தி – 1000 கிலோ ஏக்கர்
 • தென்னைமரம், பழமரங்கள் – ஒரு மரத்துக்கு 10 கிலோ
 • மரங்கள் – 5 கிலோ மரம் ஒன்றுக்கு
 • மாடித் தோட்டம் – 2 கிலோ செடிக்கு
 • மல்லிகை, முல்லை, ரோஜா – 500 கிராம் செடிக்கு மற்றும் அலங்கார செடிகள்  (3 மாதங்களுக்கு ஒரு முறை)

 

மீனாட்சி அம்மன் TEMPLE (MADURAI)

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.


தல வரலாறு:

     மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள். 

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.கட்டிடக்கலை:
   மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பழங்கால தமிழ் நூல்களின் சான்றுகளின் படி இக்கோவில் மதுரையின் மத்தியிலும், கோவிலைச் சுற்றி உள்ள தெருக்கள் தாமரை இதழ்கள் வடிவிலும் அமைந்துள்ளனவாம்!! இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ. 

இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது.. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது.  மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை.

மேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது.  இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும். 

கோவிலில் உள்ள மண்டபங்கள்:
 • அஷ்ட சக்தி மண்டபம்
 • மீனாட்சி நாயக்கர் மண்டபம்
 • ஊஞ்சல் மண்டபம்
 • ஆயிரங்கால் மண்டபம்
 • வசந்த மண்டபம்
 • கம்பத்தடி மண்டபம்
 • கிளிக்கூடு மண்டபம்
 • மங்கையர்க்கரசி மண்டபம்
 • சேர்வைக்காரர் மண்டபம் 

இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.

சிற்பக்கலை: 
        ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.  வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன.  அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ள்ன.  இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.  

    கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன.  சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன. 

திருவிழாக்கள்:

   இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது.  ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

  ஆவணி மாத திருவிழா, சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும் விழாவாகும். சித்திரைத் திருவிழா, கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் திருவிழாவாகும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.

எப்படி செல்வது?
 • மதுரைக்கு சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்து வசது உண்டு.
 • மதுரையில் ரயில் நிலையமும் உள்ளது(MDU)
 • மதுரையில் விமான நிலையமும் உள்ளது. விமான நிலையம், நகருக்கு வெளியில் அமைந்துள்ளது.

பீர்பால் கதை (BIRBAL STORY)

ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், “நமது நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் எது?” என்று கேட்டார்.
“வைத்தியத் தொழில்தான்,” என்றார் பீர்பால்.
“என்ன விளையாடுகிறாயா? போதுமான மருத்துவர்கள் இல்லாததால், மக்கள் நோயால் வருந்திக் கொண்டிருப்பதாக அபுல் பசல் கூறினாரே. அப்படியிருக்க, நம் நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் வைத்தியத் தொழில் என்று கூறுகிறாயே, இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?” என்றார் அக்பர்.
“நிச்சயம் நிரூபிக்கிறேன்,” என்ற பீர்பால் மறுநாள் கையில் ஒரு பெரிய கட்டு போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.
வழியில் ஒருவர் பீர்பாலிடம், “கையில் என்ன கட்டு?” என்று கேட்டார்.

Mulla-with-broken-hand“வழுக்கி விழுந்து விட்டேன். பலமான காயம் ஏற்பட்டு கை வீங்கி விட்டது,” என்றார் பீர்பால்.

“உடனே அந்த மனிதர் அதற்கு ஒரு வைத்தியம் சொல்லி, உடனடியாக அந்த வைத்தியத்தைச் செய்து கொள்ள வேண்டுமென்றும், தாமதப்படுத்தினால் கையையே இழக்க நேரிடும்,” என்றார்.
இவ்வாறு போகிற வழியெல்லாம் பார்க் கிறவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக வைத்தியம் சொன்னனர். ஒருவாறு அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் முப்பத்து ஆறு விதமான வைத்தியங்கள் சொல்லி விட்டனர்.
அக்பர் பீர்பாலின் கட்டைப் பார்த்து, என்னவென்று கேட்க, பீர்பால் அவரிடமும் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கை வீங்கி விட்டது என்றும் கூறி வழியில் பார்த்தவர்கள் சொல்லிய வைத்திய முறைகளையெல்லாம் சொன்னார்.
“அவர்கள் கிடக்கிறார்கள் முட்டாள்கள். அவர்கள் பேச்சைக் கேட்காதே! நான் ஓர் அற்புதமான வைத்தியம் சொல்லுகிறேன். அதை செய்து பார். பட்டென்று வீக்கம் ஒரு நொடியில் போய்விடும்,” என்றார்.
அதைக் கேட்ட பீர்பால் சிரித்தார்.
“பீர்பால் நான் என்ன சொல்லி விட்டேன். நீ எதற்காக சிரிக்கிறாய்?” என்று சற்று கோபமாக கேட்டார் அக்பர்.
“அரசே மன்னிக்க வேண்டும். எல்லாருக்கும் பிடித்தமான தொழில் எது என்று நேற்று என்னிடம் கேட்டீர்களே… அதற்கு பதில் இதுதான்,” என்றார் பீர்பால்.
அதைக் கேட்ட அக்பர், பீர்பாலை பாராட்டினார்.

 

புத்திசாலி புலவரும் நெல்மணிகளும் | Clever Poet and His Grain – Moral Story

நீதிக் கதைகள்

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
Clever Poet and His Grain - Moral Story 1

சில மாதங்களுக்கு பிறகு, அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார்.

Clever Poet and His Grain - Moral Story 2

புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, “நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே” என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.

Clever Poet and His Grain - Moral Story 3

மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை  அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்.

Clever Poet and His Grain - Moral Story 4

புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், “உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்” என கூறினார்.

 

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். “அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் அதனை இரட்டிப்பாகினால் அதை தக்க பரிசாக ஏற்றுகொள்வேன்” என்று கூறினார்.

மன்னர் புலவரைப்பார்த்து, “நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?” என்று கேட்டார்.

Clever Poet and His Grain - Moral Story 5

 

புலவரோ “அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்” என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.

 

பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், “புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்.

Clever Poet and His Grain - Moral Story 6
10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.
20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.

பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

Clever Poet and His Grain - Moral Story 7

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம் இழக்கும் நிலை ஏற்பட்டது.

 

புலவரின் புத்தி சாதுரியத்தையும், தான் செய்த தவறை உணர்ந்த அரசர் புலவரிடம் மன்னிப்பு கேட்டார்.

Clever Poet and His Grain - Moral Story 8

இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம் ஒப்படைத்தார்.

நீதி:

கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

ஆல்ப்ரெட் ராஜாவும் பிச்சைக்காரனும் ( King Alfred and the Beggar Moral Story)

மன்னர்

அரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்… அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், “ராஜாவைப் பார்க்க வேண்டும்” என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், “என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?” என்றார் அரசர். “ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்” என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார். அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
ஆல்ப்ரெட் ராஜாவும் பிச்சைக்காரனும் | King Alfred and the Beggar Moral Story for Kids

 

அப்போது மன்னர் அவனிடம், “விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று… இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது” என்றார். கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,

மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது. ‘ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்… அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!’ என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.

வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை. அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.

அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர். அவனைக் ‘கந்தல் பொதி கிழவன்‘ என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.

ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது. அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது.

அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை… எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.
அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன. அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்; வெளிச்சத்தை வழங்காது.
 
நீதி:
மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை.