மருத்துவ குறிப்புகள்

FRUIT & GRAINS

நாவல்பழத்தில் கால்சியம் அதிகம் இருப்பதால், அதை சாப்பிடுவதால் எலும்புகள் பலமாகும்.

வைட்டமின் பி1, பி2, பி5 ஆகிய சத்துக்கள் நாவல்பழத்தில் நிறைந்துள்ளது.

நீரிழிவு நோயை(சர்க்கரை நோய்) தடுக்கும் அருமருந்து.

தொழில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்.

வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும்.

பசியைத் தூண்டக்கூடியது.

 

150912015947_naval-palam

கல்லீரல் மண்ணீரல் நோய்களைத் தடுக்கும்.

நாவல்பழத்தில் ஆண்டிஆக்ஸிடன்ட் மிகமிக அதிகமாக உள்ளது.

நாவல்பழத்தை சாப்பிடுவதால் ரத்தம் விருத்தி அடையும்.

வெண்புள்ளி, அரிப்பு நோய்களை விரைவாக சரிசெய்யும் தன்மை நாவல்பழத்திற்கு உள்ளது.

ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் உதவும் மாம்பழம் !!

images

மாதா ஊட்டாத சோற்றை மாங்கனி ஊட்டும் என்பது பழங்கால பழமொழி.  

 

மாம்பழம் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் அழகைய் மெருகூட்டுகிறது. 
ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் மாம்பழமும் ஒன்று.  
இது நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.
மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போமா…..
மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
ரத்தம் நமது உடலில் புதிதாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தால் தான், உடல் வளர்ச்சியடையும், ஆரோக்கியமாகவும் விளங்க முடியும். அத்தகைய ரத்த உற்பத்திக்கு உதவுவது மாம்பழங்கள் தான்.
மாம்பழம் வாயுத் தொல்லையை நீக்கி, உடலுக்குப் புத்துணச்சியை அளிக்கிறது. 
பித்தத்தைப் போக்கி குடலுக்குப் பலம் தருகிறது.
நீண்ட நாட்களாகத் தலைவலியினாலும், அதன் காரணமாக உண்டான பார்வைக்கோளாறினாலும் அவதிப்படுகிறவர்களுக்கு, மாம்பழம் ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு மாம்பழச்சாறு பருகி வந்தால் மேற்கூறிய உடனடியாக குணமாகும். 
மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது. 
 
மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுது, வெண்ணெய் போல இருப்பதால் இதை ‘மேங்கோ பட்டர்’ என்று சொல்வார்கள். இது, தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது. 
சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.  
தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து, உங்கள் முகம் பிரகாசிக்கும். மாம்பழம் உடலுக்கு ஊட்டச்சத்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், உடலின் அழகைய் மெருகூட்டுகிறது. ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் மாம்பழமும் ஒன்று.  இது நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல; உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டதும் கூட.

 

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போமா…..

 images (1).jpgimages (2)

மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.

 ரத்தம் நமது உடலில் புதிதாக உற்பத்தியாகிக் கொண்டே இருந்தால் தான், உடல் வளர்ச்சியடையும், ஆரோக்கியமாகவும் விளங்க முடியும். அத்தகைய ரத்த உற்பத்திக்கு உதவுவது மாம்பழங்கள் தான்.

 மாம்பழம் வாயுத் தொல்லையை நீக்கி, உடலுக்குப் புத்துணச்சியை அளிக்கிறது. 

 பித்தத்தைப் போக்கி குடலுக்குப் பலம் தருகிறது.

 நீண்ட நாட்களாகத் தலைவலியினாலும், அதன் காரணமாக உண்டான பார்வைக்கோளாறினாலும் அவதிப்படுகிறவர்களுக்கு, மாம்பழம் ஒரு வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு மாம்பழச்சாறு பருகி வந்தால் மேற்கூறிய உடனடியாக குணமாகும். 

 மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.

 மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது. 

 மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுது, வெண்ணெய் போல இருப்பதால் இதை ‘மேங்கோ பட்டர்’ என்று சொல்வார்கள். இது, தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது. 

 சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.  

 தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து, உங்கள் முகம் பிரகாசிக்கும். 

தக்காளி ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் அவசியமானது

 images (4)

 

தக்காளி காய்கறி வகையைச் சேர்ந்தது என்பது பலரின் எண்ணம். ஆனால் உண்மையில் தக்காளி பழவகையைச் சேர்ந்தது.

 ஆரோக்கியத்திற்கு :

 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, அதிக அளவில் உள்ளது. இதுதவிர கால்சியம், பாஸ்பரஸ்; மற்றும் இரும்புச்சத்து வைட்டமின் பி, மாவுச்சத்து ஆகியவையும் உள்ளது. இதில் மாவுச்சத்து குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். 

 

images (3)

 தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 கோடை வெயிலில் வெளியே சென்று வந்த பிறகு ஒரு தக்காளி துண்டை வைத்து சருமத்திற்கு மசாஜ் செய்தால் கருமை நீங்கி முகம் பொலிவு பெரும்.

 கோடை காலத்தில் உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் உடல் வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும்.

 ஆண்கள் தினமும் தக்காளியை உட்கொண்டு வந்தால், 20 சதவிகிதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம்.

images (15)

 தினமும் தக்காளி சாற்றினை கொண்டு மசாஜ் செய்து வந்தால், பருக்கள் வருவது குறைவதுடன் தழும்புகளும் மறையும்.

 வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஒன்றாக சேர்ந்து இருக்கும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.

 தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். ரத்தசோகை, கல்லீரல் கோளாறு ஆகியவற்றுக்கும் மருந்தாகும். தக்காளி பழச்சாற்றை தினசரி குடித்து வந்தால் போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

 தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வைக்கு வழிவகுக்கும்.

images (16)

 கைகளில் ஏதேனும் வெட்டு காயம் ஏற்படும் பட்சத்தில், பச்சை தக்காளியை வெட்டு ஏற்பட்ட இடத்தில் வைத்தால் ஆன்டி-செப்டிக்காக செயல்படும்.

 தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.

 தக்காளியைப் பழமாகச் சாப்பிட்டாலும் இரசமாகச் சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்; உண்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும். 

இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள்

 அழகுக்கு : 

 ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.

 தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும். 

 தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

 உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.

 சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்களி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள்.

 தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்.

சோளம் :

184.jpg

குழந்தையின் எடையை ஆரோக்கியத்துடன் கூட்டும், எலும்பில் ஏற்படும் சுண்ணாம்புச் சத்து குறைவினால் வரும் ஆஸ்டியோபோராசிஸ் உள்ள பெண்களுக்குச் சோளம் கொடுக்கும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்துக்கு இணையே கிடையாது.

 

கேழ்வரகு (ஆரியம், கேவரு, ராகி, கோப்பை) :

 

பாலை விட 3 மடங்கு அரிசியை விட 10 மடங்கு கால்சியம் கேழ்வரகில் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய்க்கால மகளிருக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் மிக மிக அவசியமான உணவு கேழ்வரகு. கேழ்வரகில் “மித்தியானைன்” என்னும் ஒரு முக்கிய அமினோ அமிலம் இருக்கிறது. அது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட பெரிதும் உதவும்.

 

கம்பு(பாஜ்ரா) :

1-Pearl Millet.JPG

அரிசியை காட்டிலும் 8 மடங்கு கால்சியம் உள்ளது, வளரும் குழந்தைகளுக்கும், மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாக தர வேண்டிய தானியம். லோ கிளைசிமிக் உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. 

 

குதிரைவாலி, வரகு, சாமை :

DSCN0988

குதிரைவாலி, வரகு, சாமை இவற்றில் செய்யும் சாதத்தில் புரதம், இரும்பு, உயிர்சத்து அதிகம், நார்ச்சத்து மிக அதிகம். நார்ச்சத்து இதய நாளங்களில் படியும் கொழுப்பை கரைக்கவும், சர்க்கரை அளவு திடீர் என ரத்தத்தில் உயராமல் இருக்கவும் பெருமளவு உதவுகிறது.

Custard Apple

images (9)

‘கஸ்டட் ஆப்பிள்'(Custard Apple) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

 சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன. இந்தகைய சத்துக்கள் அடங்கிய சீதாபழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி இங்கு காண்போம்.

 சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.

 குழந்தைகளுக்கு சீத்தாப்பழம் கொடுத்து வர எலும்பு உறுதியாகும், பல்லும் உறுதியாகும்.

 சீத்தாப்பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது.

 சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

 சீத்தாப்பழ விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

 சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து, இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து, ஊறிய பின்னர் குளித்து வர தலை குளிர்ச்சி பெறும், முடியும் உதிராது, பொடுகு காணாமல் போகும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

 சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. 

 சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது

 

JACK FRUIT

images (12)

முக்கனிகளுள் ஒன்றாக கருதப்படும் பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் சுளைகள் சுவையாகவும் கண்ணை கவரும் வண்ணத்திலும் இருக்கும்.

 பலாப்பழம் சுவையில் மட்டுமல்ல… அதில் அடங்கியுள்ள மருத்துவ குணத்திலும் டாப் தான். இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்போது பார்ப்போமா….

 பலாப்பழத்தின் இனிப்புச் சுவைக்குக் காரணம், இதில் உள்ள ஃப்ருக்டோஸ், சுக்ரோஸ் தான். பலாப்பழத்தைச் சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது. சோர்வாக இருக்கும்போது, இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி கிடைக்கும்.

மனித இயக்கத்திற்கு உதவும் தைராய்டு ஹார்மோன் உடலில் உற்பத்தியாகவும், அதை உட்கிரகிக்கவும் தாமிரச் சத்து அவசியம். பலாவிலுள்ள தாமிரச்சத்து இதற்கு உதவி செய்கிறது.

images (14)

பலாபழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளதால், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயலாற்றுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் நோய்த்தொற்று உண்டாகாமல் தடுக்கிறது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.

 ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டோர் பலாபழமரத்தின் வேரை வேக வைத்து அந்த நீரோடு, பலாப்பழச்சாற்றை கலந்து குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.

 பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு. 

images (13)

நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.நெய் அல்லது தேன் கலந்த பலாப்பலத்தைச் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடையும், நரம்புகளும் வலுப்படும்.. உடலும் ஊட்டம் பெறும். 

 பலாப்பழத்திலுள்ள லிக்னன்ஸ், ஆர்கானிக் கூட்டுத்தொகுப்பான ஐசோஃப்ளேவன்ஸ், சபானின் ஆகியவை புற்று நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. இது தவிர, உடல் இளமை தோற்றத்தை பெற உதவுகிறது. 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s