கோஹினூர் வைரம்: வரலாறும் மர்மமும்

தோற்றம்:

இன்றைய ஆந்திராவில் இருக்கும் குண்டூர் பகுதி தான் கோஹினூரின் பிறப்பிடம். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் குண்டூரில் மாவட்டத்தில் இருக்கும் கொல்லூர் என்ற பகுதி தான் கோஹினூர் பிறந்த இடம்.

வைரமனாது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது. இந்த சண்டைகளுக்கு இடையில் இது சிறிது பாழாகிப் போனது என்று கூறப்படுகிறது.

தொடரும் மர்மம்

கோஹினூர் வைரத்தை வைத்திருக்கும் அரசர்கள் அவர்களது மகுடத்தையும் ஆட்சியையும் இழப்பார்கள் என்பது பல காலமாக தொடர்ந்து வரும் சாபக் கேடு. அதே போல, வரலாற்றில் கோஹினூர் வைரத்தை கைப்பற்றிய மன்னர்கள் எல்லாம், போர்களில் தோல்வியுற்று அல்லது வேறு காரணங்களால் தங்களது மகுடத்தை இழந்துள்ளனர்.

ஆண்களை தொடரும் சாபம்

இந்த கோஹினூர் வைரத்தின் சாபம் எனப்படும் மர்மம் ஆண்களை மட்டுமே பின் தொடர்வதாக கூறப்படுகிறது. அதனால் தான் கடைசியில், இந்த கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் பெண்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆகையால் தான், இப்பது விக்டோரியா, எலிசபெத் போன்ற ராணிகளின் கைமாறி வருகிறது கோஹினூர் வைரம்.

விக்டோரயாவை சேர்ந்த விதம்

கடந்த 1877ஆம் ஆண்டு இந்தியாவின் அரசியாக விக்டோரியா அறிவிக்கப்பட்ட போது, கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் அரசின் ஆபரணங்களின் ஓர் பகுதியாக மாறியது.

kohinoor queen

ஆந்திராவிலிருந்து அலாவுதீன் கில்ஜி எனும் மன்னனின் தளபதி மாலிக் கபூரால் கைப்பற்றப் பட்டது. இங்கிருந்து தான் கொஹினூரின் நாடோடி வாழ்க்கை ஆரம்பமானது. பின்னர் இந்த வைரம் குவாலியர் மன்னர் விக்ரம் ஜித்தின் கைகளுக்கு சென்றது.

மாமன்னர் பாபருடன் நடந்த போரில் டெல்லியை ஆண்ட இப்ரஹாம் லோடி என்ற மன்னனுடன் விக்ரம்ஜித்தும் இறந்து விட, உயிருக்கு பயந்த உறவினர்கள் வைரத்தை பாபரின் மகனான ஹீமானிடம் அன்பளிப்பாக கொடுத்தனர்.(ஹீமான் பேரரசர் அக்பரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது)

கோஹினூர் வைரமானது ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான வைரம் என்று கூறப்படுகிறது.

பாபர் கைக்கு வந்த கோஹினூர் :

டெல்லி சுல்தான் ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து கை மாறி,கை மாறி, இறுதியாக 1526 ஆம் ஆண்டில் முதல் முகலாயப் பேரரசர் பாபர் கைகளுக்கு வந்தது கோஹினூர் வைரம் என்று வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.

விக்கிரமாதித்திய சிக்கிந்தர் :

தோமராக்களின் இறுதி அரசனான விக்ரமாதித்யா சிக்கந்தர் லோடியால் தோற்கடிக்கப்பட்டார், இவர் டெல்லி சுல்த்தான் ஆவார் மற்றும் டெல்லியில் வசித்த டெல்லி சுல்த்தானின் ஓய்வுரிமை பெற்றவரானார்.

kohinoor 0

லோடியின் வீழ்ச்சியில் முகலாயர்களின் பதிலாக்கத்தால், அவரது வீடு முகலாயர்களால் சூறையாடப்பட்டது மற்றும் இளவரசர் ஹூமாயூன் குறுக்கிட்டு சமரசம் செய்து அவரது சொத்தை மீட்டு அவரை டெல்லியை விட்டு வெளியேற்றி சித்தவூரில் உள்ள மேவாருக்கு நாடு கடத்தவும் அனுமதித்தார்.

ஹூமாயூன் :

ஹூமாயூனின் பண்பினால், இளவரசர் விக்ரமாதித்யாவிற்கு சொந்தமான கோஹினூர் போன்ற வைரங்களில் ஒன்று ஹூமாயூனுக்கு அளிக்கப்பட்டது. ஹூமாயூன் மிகவும் மோசமான அதிர்ஷ்டத்தை தனது வாழ்க்கை முழுவதும் அனுபவித்தார். ஷேர் ஷா சூரி ஹூமாயூனை தோற்கடித்தார், அவர் பீரங்கி வெடிவிபத்தில் உயிரிழந்தார்.

ஜலால் கான் :

ஹூமாயூனின் மகன் ஜலால் கான், அவரது மந்திரியால் சட்டத்திற்குப் புறம்பாக நடந்ததால் அவரது மைத்துனரால் கொலைசெய்யப்பட்டார், அவர் வெற்றியின் அடியால் துரதிர்ஷடவசமாக கண்களில் தாக்கப்பட்டதால் தனது இந்தியாவின் பேரரசர் உரிமையை இழந்தார்.

ஹூமாயூனின் மகன் அக்பர் அந்த வைரத்தை தன்னிடம் வைத்ததில்லை.

ஷாஜகான்

பின்னர் ஷாஜகான் மட்டுமே அதை அவரது கருவூலத்திலிருந்து வெளியே எடுத்தார். அக்பரின் பேரனான ஷாஜகான் அவரது மகன் ஔரங்கசீப் மூலமாக கவிழ்க்கப்பட்டார், அவர் அவரது மூன்று சகோதரர்களைத் திட்டமிட்டு கொலை செய்தார்.

மிகப்பெரிய கண்காட்சியில் கோஹினூர் வைரம் :

1851 ஆம் ஆண்டில் லண்டனின் ஹைட் பார்க்கில் கிரேட் எக்ஸிபிஷன் நிகழ்ந்த போது பிரிட்டிஷ் பொதுமக்களுக்கு அந்த கோஹினூர் வைரத்தைக் காணும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.kohinooranim

பின்னர் பாரசீக மன்னரான தாமஸ்ப் கைகளுக்கு சென்றடைந்தது. பிற்பாடு தட்சன பீட பூமியை ஆண்ட நிஜாம் ஷாவை அடைந்தது. புகழ் பெற்ற இந்த வைரமானது மீண்டும் பாபர், அக்பர் பரம்பரையில் வந்து இன்றளவும் காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹாலை கட்டிய ஷாஜஹானின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

1739 ல் டெல்லியை சூறையாடி நாதிர்ஷா எனும் பாரசீக மன்னன் கைப்பற்றினான்.(கோஹினூர் என்ற பெயரும் நாதிர்ஷாவால் தான் வந்தது) பின்னர் இவன் பரம்பரைகளை அலங்கரித்த கோஹினூர் வைரத்தை இந்தியாவிலுள்ள பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும் ரஞ்சித்சிங் கைவசம் வந்தது.

மெல்ல மெல்ல நுழைந்து மொத்த இந்தியாவையும் தங்கள் கைவசம் கொண்டுவந்த ஆங்கிலேயர்களின் கீழ் பஞ்சாப் போன பின் கோஹினூர் வைரம் சர்.ஜான்.லாரன்ஸ் கைகளை சென்றடைந்த பின் பிரிடீஷ் மகாராணி விக்டோரியாவிற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது..

கோஹினூர் வைரம் மகாராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டு, அது அதற்கு நிலையான இடமாகவும் மாறி இன்று வரை கிரீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s