அர்த்தநாரீசுவரர் (“நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்”)

பாலியல் வன்கொடுமைக்காக இந்தியா அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது; குறிப்பாக ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் இப்பிரச்சனைக்கு அதிகமாக ஆளாகின்றனர். ஆனால் அது எப்போதும் அப்படி இருந்ததில்லை. இந்திய புராணத்தின் வரலாற்றுப் பதிவேடுகளை நீங்கள் பார்த்தால், சமுதாயத்தின் வழக்கமான விதிகள் உடைந்திருக்கும் பல உதாரணங்களைப் பார்க்கலாம்.

ஐயப்பன்: விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வன்

பல நிகழ்வுகளில், ஆண்மையையும் பெண்மையையும் பிரிக்கின்ற அந்த நுண்ணிய மெல்லிய கோடு தெளிவற்றதாக இருக்கும். பாலியல் பண்பு மற்றும் பாலினம் பற்றி முன்னமைக்கப்பட்ட கருத்துக்களை தைரியமாக பரிசோதிக்கவும், சில நேரங்களில் மாற்றவும் கூட பண்டைய கால கவிஞர்களும், எழுத்தாளர்களும் துணிந்துள்ளனர்.

அரவானின் சோகமான கதை!

இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, ஆன்மாவிற்கு பாலினம் இல்லை என நம்பப்படுவதாலே. நீங்கள் சொந்தம் கொண்டாடும் உங்கள் உடல் என்பது ஆன்மாவிற்கான ஆடை மட்டுமே. உயிருனுடன் இருக்கும் வரை உபயோகப்படும் இந்த ஆடை, மரணத்திற்கு பிறகு தேவைப்படுவதில்லை. ஒரு ஆணாக, பெண்ணாக, மிருகமாக அல்லது செடி கொடியாக நீங்கள் பிறப்பது உங்கள் கர்மத்தின் விளைவால் நடப்பதாகும். இன்று, இந்து புராணத்தில் பாலினம் மற்றும் பாலியல் பண்பின் சுவர்களுக்குள் ஊடுறுவும் சில கதைகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

காதல் மற்றும் துயரம் நிறைந்த கதை: தேவலோக அழகி ஊர்வசியும்… புருரவாவும்…

பெண்களின் பாத்திரத்தை ஆண்கள் ஏற்றுக் கொண்ட கதைகள், ஆண்களை போல் வாழ்ந்த பெண்கள் பற்றிய கதைகள் மற்றும் பெண்மையும் ஆண்மையும் ஒன்றாக இருந்ததற்கான உதாரணங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். படித்து விட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிட மறந்து விடாதீர்கள்.

1) அர்த்தனாரீஸ்வரர்

அர்த்தநாரீசுவரர் வடிவத்தைப் பற்றி பழைய பாடல்களிலே காணலாம். “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து இவ்வடிவத்தினைக் கூறுகிறது.“பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்றுபுறநானூற்றூக் கடவுள் வாழ்த்து இதனையே கூறுகிறது.

“அர்த்தனாரீஸ்வரர்” என்றால் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் உள்ள கடவுளாகும். சிவபெருமான் மற்றும் அவருடைய மனைவியான பார்வதி தேவியின் ஒன்றுபட்ட வடிவம் தான் இது. புருஷா (ஆண்மை) மற்றும் ப்ரகீர்த்தியின் (பெண்மை) ஐக்கியத்திற்கான வடிவத்தை இது குறிக்கிறது. ஒருவரில்லாமல் மற்றொருவர் இல்லை என இந்த வடிவம் கூறுகிறது. அதனால் ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் அல்ல. எவர் ஒருவர் இந்த இரண்டு குணங்களையும் ஏற்றுக் கொள்கிறாரோ, அவரே முழுமையான வாழ்க்கையை வாழ்வார்.

2) மோகினி

இந்து புராணம் முழுவதுமே மகா விஷ்ணு அவர்களின் அவதாரமாக மோகினி பல முறை வந்திருக்கிறார். அவரைப் பற்றி குறிப்பிட முக்கியமான மூன்று கதைகள் அடிக்கடி கூறப்படுவதுண்டு: மோகினியின் முதல் தோற்றம் வெளிப்பட்டது சமுத்திர மந்தனுக்கு பிறகாகும். அமுதத்தை பங்கு போட்டு கொள்வதில் நடந்த பிரச்சனையின் போது தான் அவள் முதன் முதலில் தோன்றினாள். மயக்கும் பெண் போல் உருவெடுத்த விஷ்ணு பகவான், அமுதத்தை தேவர்களுக்கு மட்டும் அளித்திட விவேகத்துடன் சென்றாள்.

3) மோகினி

இரண்டாவது முறையாக அவள் தோன்றியது சிவபெருமானை பத்மாசுரன் என்ற அசுரனிடம் இருந்து காப்பாற்றுவதற்கு. உள்ளத்தை கொள்ளை கொல்லும் மோகினி அந்த அசுரனை தன்னை தானே கொள்ள செய்தாள். ஆனால் அவளின் அழகில் மயங்கிய சிவபெருமான் அவளுடன் இணைந்து, தென் இந்தியாவின் முக்கிய கடவுளான ஐயப்ப சுவாமியை பெற்றெடுத்தனர். மூன்றாவதாக அவள் தோன்றியது மகாபாரதத்தில். போரில் பாண்டவர்களின் வெற்றியை உறுதி செய்ய அர்ஜுனின் மகனான அரவானை பலி கொடுக்க வேண்டியிருந்தது. அரவானுக்கு ஒரு கடைசி ஆசை இருந்தது. அது தான் இருப்பதற்கு முன்பு திருமணத்தின் இன்பத்தை சுவைப்பது. ஆனால் சாக போகும் ஒருவனை மணக்க எந்த ஒரு பெண்ணும் முன் வரவில்லை. இதற்கு தீர்வாக, கிருஷ்ணரே மோகினியாக அவதாரம் எடுத்து, அரவானை திருமணம் செய்து கொண்டார். அவர் மரணத்தின் போது துக்கம் அனுசரிக்கவும் செய்தார்.

4) ஷிக்கண்டி

துருபத மகாராஜாவின் மகளாக ஷிக்கண்டி பிறந்தாலும் கூட, ஒரு ஆணாக அவள் வளர்க்கப்பட்டாள். அவள் ஒரு பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டாள் என சில கதைகள் கூட கூறுகிறது. ஒரு யக்ஷாவின் மூலம் பீஷமரை கொன்று, சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்ந்திட அவர் தன் பாலினத்தையே வர்த்தகம் செய்தார். இரு பால் கூறுகளையும் ஒருங்கே பெற்றிருக்கும் குணத்தை கொண்டவர் அவர் என பல கதைகள் அவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளது.

5) ப்ரிகனலா

தேவலோக அழகியான ஊர்வசியை அர்ஜுனன் தவிர்த்ததால், அவர் தன் வாழ்க்கையில் ஒரு வருட காலத்திற்கு பெண்ணாக மாற வேண்டும் என அவள் சபித்தாள். தன் வனவாசத்தின் கடைசி வருடம் விரட்டா அரசரின் ராஜ்யத்தில் ப்ரிகனலா என்ற பெண்ணாக அவன் வாழ்ந்த போது, இந்த சாபம் அவனுக்கு வரமாக மாறியது. இந்த சாபம் அவனை பெண்ணாக மாற்றாமல் ஒரு அரவாணியாக மாற்றியது என்றும் சிலர் கூறுகின்றனர்.

6) இல/சுட்யும்னா

ஒரு ஆணாக பிறந்த சுட்யும்னா, சிவபெருமானின் தடை செய்யப்பட்ட சோலைக்குள் தவறுதலாக சென்ற போது, தன் வாழ்நாளில் பாதி பெண்ணாக மாறி விடுவதாக சாபத்தைப் பெற்றான். ஒவ்வொரு மாதமும் தன் பாலினத்தை மாற்றும் இவனை, பெண் வடிவத்தில் இல என கூறுவார்கள். அவள் மீது புத்தா (புதன் கிரக கடவுள்) காதலில் விழுந்தார். புத்தாவிற்கு புருரவாஸ் என்ற மகனை இல பெற்றெடுத்துக் கொடுத்தாள். இவனே குருகுலத்திற்கு தந்தையானான். சுட்யும்னாவிற்கு ஆண் வடிவத்தில் மேலும் மூன்று மகன்கள் உள்ளனர்.

7) ஒரு பெண்ணாக நாரதர்

மஹா விஷ்ணுவின் தீவிர பக்தன் என பெருமிதம் கொண்டார் நாரதர். கடவுளின் மாயங்களுக்கு தடைகாப்பறுதி பெற்றவராக விளங்கினார். தன் கர்வத்தில் இருந்து அவரை மீட்டு வர, நாரதரை அவர் குளிக்கும் போது மகா விஷ்ணு ஒரு பெண்ணாக மாற்றினார். ஒரு பெண்ணாக, தன் உண்மையான வடிவத்தை மறந்து ஒரு அரசனை மணந்து கொண்டார். ஒரு அரசனின் மனைவியாக, பல குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார். ஆனால் ஒரு போரின் போது அந்த அரசனும் அவரின் அனைத்து குழந்தைகளும் கொல்லப்பட்டனர். துயரத்தில் மூழ்கிய அவர், நீரில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்த போது, தன் உண்மையான வடிவமான நாரதாரக உருமாறினார். மாயத்தின் சக்தியை உணர்ந்த நாரதர், யாருமே அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் உணர்ந்தார்.

8) கோபேஸ்வரராக சிவபெருமான்

பிருந்தாவனத்தில் கிருஷ்ணர் ராசலீலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, சிவபெருமானும் பார்வதி தேவியும் அதில் பங்கு கொள்ள ஆர்வம் காட்டினர். பார்வதி தேவி ஒரு பெண் என்பதால் அவருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சிவபெருமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிருந்தாவன கடவுள் சிவபெருமானை மனோசரோவர் ஏரியில் குளிக்க சொன்னார். அப்படி செய்தாள் அவரால் ராசலீலையில் கலந்து கொள்ள முடியும் என்றும் கூறினார். அதை போலவே செய்த சிவபெருமான் ஒரு பெண்ணாக உருமாறினார். அதன் பின் உள்ளே அனுமதிக்கப்பட்ட அவரை கோபேஸ்வரர் என கிருஷ்ணர் அழைத்தார். பிருந்தாவனத்தில் உள்ள கோபேஸ்வர் கோவிலில் கோபேஸ்வரராக சிவபெருமானை அனைவரும் வழிபடுகின்றனர். ஒரு பெண்ணாக அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கு இங்கே சேலை கட்டப்பட்டிருக்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s