தமிழ் நாட்டின் புகழ்பெற்ற அரண்மனைகள் (Popular Palaces of Tamil Nadu)

தமிழ்நாடு (TAMIL NADU)

தமிழ்நாட்டை பல்வேறு காலகட்டங்களில் சோழர்களும், பாண்டியர்களும், பல்லவர்களும் ஆண்டு வந்துள்ளனர்.

இவர்களைத் தவிர, ஏராளமான குறுநில மன்னர்களும், ஜமீன்தார்களும், தமிழ்நாட்டின் பல பகுதிகளை ஆண்டு வந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் வாழவில்லை என்றாலும், அந்த ராஜரீக காலத்தினை நாம்
நம் கண்முன்னே நிறுத்தும், தமிழ்நாட்டில் இன்றும் நாம் காணக்கூடிய அரண்மனைகளில் பிரபலமாக அறியப்படும் 6 அரண்மனைகளை பார்ப்போம்:

1)செட்டிநாடு அரண்மனை (Chettinad Palace)

tblgeneralnews_44041079283

செட்டிநாடு அரண்மனை, இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கலை, கட்டிடக் கலை, மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் அதிசயிக்கத்தக்க கலவை ஆகும். டாக்டர். அண்ணாமலைச் செட்டியார், இவ்வரண்மனையை வடிவமைத்து, 1912-ம் ஆண்டில் கட்டி முடிக்கச் செய்தார். அக்காலத்தில் விளங்கிய தொழில் நுட்பத்தைப் பற்றி பல தகவல்களை நமக்கு அளிப்பதால், இது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு கட்டிடமாகக் கருதப்படுகிறது.

செட்டிநாடு அரண்மனை, செட்டிநாடு மக்களின் சிறந்த கலாச்சாரப் பெருமைக்கு, மிக உயரிய சான்றாக விளங்குகிறது.

செட்டியார்களின் விருப்பத்திற்குரிய பாரம்பரிய பாணியே இங்கு காணப்படுகிறது. கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளிலிருந்து, இவ்வரண்மனை கட்டுமானத்திற்கு மூலப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், தட்டு முட்டு சாமான்கள் மற்றும் திண்டுகள் ஆகியவை இங்கு இறக்குமதி செய்யப்பட்ட்தால், இவை இக்கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்துள்ளன.

அலங்கார விளக்குகள், தேக்கு மர சாமான்கள், பளிங்குக் கல், கண்ணாடிகள், கம்பளங்கள், மற்றும் ஸ்படிகங்களும் இறக்குமதி செய்யப்பட்டன. எனினும், இது, வெவ்வேறு வகையான கலைகள் மற்றும் பாணிகளைக் கொண்டுள்ளதால் இது தனிச்சிறப்பு வாய்ந்த்தாக உள்ளது.

2)பத்மநாபபுரம் அரண்மனை (Padmanabhapuram Palace) 

padpanaba

கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலைக்கு அருகில், நாகர்கோவில் நகரிலிருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரம் செல்லும் பாதையில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனை தமிழ்நாட்டுப் பகுதியில் அமைந்திருந்தாலும், கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது கி.பி.1601-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட ரவிவர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்டது.

 வரலாறு (Palace History)

padapa3

இந்த அரண்மனையானது கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள்-1592-1609 என்பவரால் கட்டப்பட்டது. முதலில் தாய்க் கொட்டாரம் மட்டும் 1550 களில் இருந்ததாகத் தெரிகிறது. பின் கி.பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் இந்த அரண்மனையை விரிவுபடுத்தினார். அதன் பிறகு மன்னர் மார்த்தாண்ட வர்மா தங்கள் பரம்பரையினரை பத்மனாபபுரத்தில் கோவில் கொண்டுள்ள விஷ்னுவின் சேவர்கள் என பிரகடனம் செய்தார். 1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது. 1795 இல் தான் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அரண்மனை கேரளக் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவ்வரண்மனையில் உள்ள முக்கியமான கட்டிடங்கள் பின்வருமாறு:

padapa2

  • மந்திர சாலை
  • தாய்க் கொட்டாரம்
  • நாடக சாலை
  • நான்கடுக்கு மாளிகை(உப்பரிகை மாளிகை)
  • தெகீ கொட்டாரம் (தெற்கு கொட்டாரம்)

பத்மநாபபுரம் அரண்மனையானது, பத்மநாபபுரக் கோட்டைக்குள்ளே, மேற்கு தொடர்ச்சி மலையான வேளிமலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனை மாளிகை என்று குறிப்பிடுவதைவிட, மாளிகைத் தொகுதியென்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக அமையும். ஏறத்தாழ 14 மாளிகைகளைக் கொண்ட தொகுதியாகவே இந்த அரண்மனை காணப்படுகிறது

3)ஃபெர்ன்ஹில்ஸ் பேலஸ் (Hpernhills Palace)

fernhills_palace_ooty

fernhill-palace

1844-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஃபெர்ன்ஹில்ஸ் பேலஸ் அந்தக் காலத்தில் மைசூர் மகாராஜாவின் கோடை கால வசிப்பிடமாக இருந்து வந்தது. ஊட்டியில் அமைந்துள்ள இந்த அரண்மனை தற்போது பச்சைப் புல்வெளிகள், அடர்ந்த காடுகள், பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அழகாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

3)திருமலை நாயக்கர் மஹால்

(Thirumalai Nayakar Mahal) 

naya

மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹால், கி.பி.1636-ஆம் ஆண்டில், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால், இந்தோ சாரசனிக் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனையில் 58 அடி உயரம் உள்ள 248 தூண்கள் அமையப் பெற்றுள்ளன. இங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம், 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

 அமைப்பு (Structure)

இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

ஒலி-ஒளி காட்சி (Audio -visual display)

nayak-mahal2

இந்த மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டுமுதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சி நாள்தோறும் மலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் 2008-09 ஆண்டில் சுமார் 36 லட்சம் வரை வருவாய் ஈட்டப்பட்டது

 

4)தஞ்சாவூர் அரண்மனை

tanjorech

தஞ்சாவூர் அரண்மனையானது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. அவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்த அரண்மனை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இந்த அரண்மனை வளாகத்துக்குள் தற்போது ராஜா சரபோஜி மெமோரியல், ராயல் பேலஸ் அருங்காட்சியகம், தர்பார் ஹால், சரசுவதி நூலகம் ஆகியவை உள்ளன.

 வரலாறு (History)

மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.

அரண்மனையின் பகுதிகள் (Parts of the palace)

அரண்மனையின் வளாகம் மொத்தம் 110 ஏக்கரில் அமைந்துள்ளது.இந்த அரண்மனை நான்கு முதன்மையான கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என இவை அழைக்கப்படுகின்றன.

மணிமண்டபம் (Manimantapam)

மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன.ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தர்பார் மண்டபம் (Darbar Hall)

தஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபமாகும். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது.

ஆயுத சேமிப்பு மாளிகை (House Armed Storage)

இது கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.

நீதிமன்ற கட்டடம் (Court building)

இதனை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது.இது 7 மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது என்றாலும் தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளன

 

5)தமுக்கம் அரண்மனை:

nayak

1670-இல் கட்டப்பட்ட தமுக்கம் அரண்மனை, நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ராணி மங்கம்மாளின் கோடை கால மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. தமுக்கம் என்றால் “கோடை காலத்தில் இளைப்பாறும் இடம்’ என்று பொருள். மதுரையிலுள்ள இந்த அரண்மனை 1959-இல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகம் என்ற பெயரில் உள்ளது.

thmukkm

தமுக்கம் அரண்மனை அல்லது இராணி மங்கம்மாள் அரண்மனை தமிழ் நாடு,மதுரையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழமையான அரண்மனையாகும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடக் நவாபிடம் இருந்தது; ஆங்கிலேயோர் ஆட்சிக் காலத்தில் இந்த அரண்மனை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்ற தமுக்கம் மைதானமும்  இந்த அரண்மனையைச் சேர்ந்ததாகும்.

 

6)சொக்கநாத நாயக்கர் அரண்மனை:

மதுரை நாயக்கர் மன்னர்களால் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது ராணி மங்கம்மாள் அரண்மனை என்றழைக்கப்படுகிறது. இது திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு, திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s