வலம்புரி சங்கு

குறைவில்லா செல்வம் தரும் வலம்புரி சங்கு

பாற்கடலில் மஹாலக்ஷ்மியுடன் தோன்றிய பெருமை வலம்புரிச் சங்குக்கு உண்டு . வலம்புரிச் சங்கு, சாளக்ராம மூர்த்தம், ருத்ராட்சம், விநாயகர் ஆகிய நான்கு தேவதா ஸ்ரூப நிலைகளும் எந்தவிதமான பிரதிஷ்டா நியமங்களும் இல்லாமலேயே தன்னியல்பான தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய இறையம்சம் பெற்றவை.

sangu

அதிலும் விசேஷமாக ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்தத் தேவதா மூர்த்தத்திற்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்தத் தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரணப் பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும்.

இதன் அடிப்படையிலேயே நமது திருக்கோவில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது

சங்கு பஞ்சபூதங்களாலும் மாறுபடாதது. நீரில் கிடைப்பது. நெருப்பால் உரு மாறாதது.

இதிலுள்ள துவாரத்தினில் காற்றைச் செலுத்தினால் சுநாதமான ஒலியை வழங்குவது.

பவழம், முத்து மற்றும் பாணலிங்கம், சாளகிராமம் ஆகியவை உயிரினங்களிலிருந்து கிடைத்து பூஜைக்குரிய பொருட்களாக விளங்குவதுபோல் சங்கும் கடலில் கிடக்கப்பெறும் பூச்சியினத்தின் மேல் ஓடு.

பொதுவாக சங்குகள் இரண்டு வகைப்படும்.

1. வலம்புரி சங்கு,
2. இடம்புரி சங்கு.

இடது கையால் பிடித்துக் கொண்டு ஊதுவதற்கு வசதியாக அமைந்திருப்பது வலம்புரி சங்குகும்.

வலது கையால் பிடித்து ஊதும் அமைப்பில் உள்ளது இடம்புரி சங்கு.

லட்சம் இடம்புரி சங்குகள் கிடைத்தால் ஒரு வலம்புரி சங்கு கிடைக்கும். மிக மிக மிக அரிதாக வலம்புரி சங்கு கிடைக்கிறது .

valmpuri-sangu

எங்கெல்லாம் வலம்புரி சங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் அந்த திருமகள் இருப்பாள்.

எங்கெல்லாம் சங்கின் ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் மகாலட்சுமி நித்திய வாசம் செய்வாள்.

மஹாலக்ஷ்மியின் அருள் பார்வை மட்டும் கிடைத்து விட்டால், குப்பையில் இருப்பவன் கூட கோபுர உச்சிக்கு போய் விடலாம்.

அன்றாட சோத்துக்கே அல்லாடும் குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், அரசன் போல் வாழலாம்.

செல்வம் இழந்து, செல்வாக்கிழந்து, செல்லாகாசாகி போனவர்கள் கூட, எதை இழந்தார்களோ, எங்கே இழந்தார்களோ, அதை அங்கேயே பெறலாம்.

முயற்சித்த காரியங்களில் முழுத்தடை, தொழில் உத்தியோக ரீதியாக வருமான குறைவு, குடும்பத்தில் வம்பு சண்டைகள் இருக்கவே இருக்காது.

கடன் கொடுக்கும் அளவுக்கு வருமானம் உயரும். புரிந்து கொள்ளாமல் புறம் பேசியவர்கள், அறிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்தவர்கள் எல்லாம் தேடி வரும் நிலை உருவாகும்.

தருமருடைய சங்கு அனந்த விஜயம், அர்ஜுனனுடைய தேவதத்தம், பீமனுடையது மகாசங்கம். நகுலனுடையது சுகோஷம்.

மகாதேவனுடையது மணி புஷ்பகம். கடலில் பிறக்கும் சங்குகளில் மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு என்ற எட்டு வகை சங்குகள் உள்ளன.

9fe1d4c461c5139bf56c13985e100ecf

விகனச ஆகமவிதிப்படி திருப்பதி வெங்கடாசலபதியிடம் மணி சங்கும், திருவரங்கம் ரங்கநாதருக்கு துவரி சங்கும், அனந்த பத்மநாப சுவாமிக்கு-பாருத சங்கும், பார்த்தசாரதி பெருமாளுக்கு- வைபவ சங்கும், சுதர்ஸன ஆழ்வாருக்கு-பார் சங்கும், சவுரிராஜப் பெருமாளுக்குத் துயிலா சங்கும், கலிய பெருமாளுக்கு- வெண் சங்கும், ஸ்ரீ நாராயண மூர்த்திக்கு-பூமா சங்கும் உள்ளன.

வலம்புரி சங்கின் ஓம் என்னும் ஓங்கார பிரணவ மந்திரத்தை மைல் கணக்கில் ரீங்காரம் செய்யும் தன்மை படைத்தது.

இந்த சங்கை தான் மகாவிஷ்ணு கையில் வைத்திருக்கிறார். சூரிய பகவான் வைத்திருக்கிறார். துர்க்கை அம்மனின் கையில் வலம்புரி சங்கு தான் இருக்கிறது.

ஒரு வலம்புரி சங்கு கோடி இடம்புரி சங்கிற்கு சமம் .சங்கில் வலம்புரி சங்கே சிறப்பு மிக்கது.

வலம்புரி சங்கால் அபிஷேகம் செய்தால் 10 மடங்கு பலன் கிடைக்கும் . செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் சங்கில் பால் நிரப்பி ,செவ்வாய் கிரக பூஜை செய்தால்
தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.

கடன் பிரச்சனை இருப்பவர்கள் குங்கும அர்ச்சனை செய்தால் கடன் விலகும் .பில்லி ,சூனியம் ,திருஷ்டி அண்டாது .

கிராமங்களில் பெரும்பான்மையான வீடு வாசலில் சங்கை பூமிக்கு அடியிலும் மீதி மேலேயும் தெரியும் படி பதிப்பர்.

வெளியில் இருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக சென்று சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு ,சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே வருகிறது .

குழந்தைகளுக்கு சங்கில் பாலை ஊற்றி கொடுக்கும் பழக்கம் பழங்காலத்தில் இருந்தது.

குழந்தை இல்லாதவர்கள் சங்கில் பால்,குங்குமப் பூ இட்டு சந்தான கணபதியை நினைத்து பூஜை செய்து 48 நாள் கணவருடன் சேர்ந்து அருந்தி வந்தால் பலன் கிடைக்கும்.

போருக்கு போகும் காலங்களிலும்,விழாக்களிலும் சங்கில் ஒளி எழுப்பி செல்வது வழக்கமாக கொண்டிருந்தது .சங்கின் ஒலி மங்களத்தை கொடுக்கவல்லது .

மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் வலம்புரி சங்கை பூஜித்து வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறோம்