உலகில் உள்ள மிகச்சிறந்த 10 கடற்கரை நகரங்கள் !!! (The Most Beautiful Seas in the World !!! )  

உலகின் மிக அழகான கடல்

சுற்றுலா என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் இடம் என்றால் கடற்கரை தான். அதிலும் வெளிநாடுகளுக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக இருந்தால், அப்போது தேர்ந்தெடுக்கும் நகரங்களில் நிச்சயம் கடற்கரை இருப்பது போன்ற சுற்றுலா நகரங்களைத் தான் தேர்ந்தெடுப்போம். ஏனெனில் கடற்கரை உள்ள நகரங்களில் நேரம் போவதே தெரியாது. மேலும் அங்கு மிகவிம் பாதுகாப்பாகவும் இருக்க முடியும். அந்த வகையில் உலகில் ஒருசில கடற்கரை நகரங்கள் சிறந்தது என்று பெயர் பெற்றுள்ளது. மேலும் அந்த நகரங்கள் இரவில் பார்க்கும் போது மிகவும் அழகாகவும், அனைவரையும் கவரும் வகையிலும், அங்கு கலாச்சாரம் மற்றும் கட்டிடக்கலை போன்றவை சிறந்ததாகவும் இருக்கும். எனவே நீங்கள் குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு அதிலும் கடற்கரை நகரங்களுக்கு செல்ல விரும்பினால், அத்தகையவர்களுக்காக உலகில் உள்ள சிறந்த 10 கடற்கரை நகரங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பார்த்து, சுற்றுலாவிற்கு எங்கு செல்லலாம் என்று முடிவெடுங்கள்.

மியாமி, ஃப்ளோரிடா

18-1371549016-1-miami

உலகிலேயே மியாமி நகரம் தான் கடற்கரை நகரங்களுள் மிகவும் அழகாகவும், கவர்ச்சியானதாகவும் இருக்கும். இது ஒரு சிறந்த சுற்றுலா நகரங்களுள் முக்கியமானதும் கூட.

துபாய், ஐக்கிய அரபு எமிரேட்

18-1371549029-2-dubai

துபாயில் கடற்கரை மட்டுமின்றி, அழகிய கட்டிடக்கலையும் உடையது. இங்குள்ள கடற்கரையின் முன்பு பல்வேறு அழகான சொகுசு ஹோட்டல்கள் உள்ளன. அதில் பூர்ஜ் அல் அராப் ஹோட்டல் மிகவும் பிரபலமானது. மேலும் அது ஒரு உருவகச் சின்னமாக உள்ளது.

பார்சிலோனா, ஸ்பெயின்

18-1371549058-3-barcelona

பார்சிலோனா மத்தியதரைக் கடலின் விளிம்பில் அமைந்துள்ளது. மேலும் இங்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் 2.5 மைல் தூரம் வெள்ளை நிற மணல் உள்ளது. இதுவும் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நகரங்களுள் சிறந்தாக கருதப்படுகிறது.

ரியோ டி ஜெனிரோ,

18-1371549076-4-rioda

பிரேசில் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மிகவும் பிரபலமான ஒரு கடற்கரை நகரங்களுள் ஒன்று. இங்கு வரலாற்று இராணுவக் கோட்டைகள், போர்த்துகீசிய வடிவமுள்ள உல்லாச நடைபாதைகள், உணவகங்கள், அழகான இரவு விடுதிகள் போன்றவை அமைந்து, இந்த நகரத்திற்கு இன்னும் அழகைக் கூட்டுகிறது.

கேப் டவுன், தென்னாப்பிரிக்கா

18-1371549094-5-capetown

கடந்த பத்தாண்டு காலமாக தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் டவுன் சிறந்த கடற்கரை நகரமாக கருதப்படுகிறது. இங்கு ஐரோப்பிய நேர்த்தியுடன் அனைத்தும் அமைந்திருப்பதால், இது ஒரு சிறந்த கடற்கரை நகரமாக உள்ளது.

மும்பை, இந்தியா

18-1371549108-6-mumbai

மஹாராஷ்டிராவின் தலைநகரமான மும்பையும் ஒரு சிறந்த கடற்கரை நகரங்களுள் ஒன்றாக உள்ளது. அதிலும் அங்கு பல்வேறு கடற்கரைகளுடன், மேற்கத்திய கடற்கரையும் இணைந்துள்ளது. அதில் தாதர் சௌபதி, ஜூஹூ கடற்கரை, வெர்ஸோரா கடற்கரை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

லாஸ் ஏஞ்சல்ஸ்

18-1371549130-7-losangeles

ஐக்கிய அமெரிக்கா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் பொழுதுபோக்கு நிறைந்த நகரங்களுள் முக்கியமானவை. இங்குள்ள சான்டா மோனிகா கடற்கரையில் பல ஹாலிவுட் படப்பிடிப்புக்கள் எடுக்கப்படும். மேலும் இங்கு பல கேளிக்கை பூங்கா சவாரிகள், மீன் அதிசயங்கள் மற்றும் உணவுத் திருவிழா போன்ற பல உள்ளதால், இது ஒரு சிறந்த பொழுதுபோக்குடன் கூடிய கடற்கரை நகரமாக உள்ளது.

சிட்னி, ஆஸ்திரேலியா

18-1371549144-8-sydney

சிட்னி, தென்கிழக்கு கடற்கரையில் இருக்கும் டாஸ்மான் கடலில் அமைந்துள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகராகும். இந்த பல்வேறு சர்வதேச விளையாட்டுக்கள் நிகழும். இத்தகைய சிட்னியும் உலகிலேயே மிகவும் சிறந்த மற்றும் அழகான கடற்கரை நகரங்களுள் ஒன்றாகும்.

வெனிஸ், இத்தாலி

18-1371549159-9-venice

வடகிழக்கு இத்தாலியில் 118 சிறு தீவுகளால் அமைந்துள்ள வெனிஸ் நகரமும் ஒரு சூப்பரான கடற்கரை நகரமாகும். மேலும் இந்த நகரம் அழகு, கலாச்சாரம், கட்டிடக்கலை மற்றும் கடற்கரையால் இன்னும் புகழ்பெற்றதாக உள்ளது.

நைஸ், பிரான்ஸ்

18-1371549174-10-nice

மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள நைஸ் நகரம், இரண்டாவது பெரிய பிரஞ்சு கடற்கரை நகரமாகும். மேலும் இந்த பிரஞ்சு நகரம், பாரிஸுக்கு அடுத்த இரண்டாவது புகழ்பெற்ற சுற்றுலா நகரமாகும். இங்குள்ள கடற்கரையானது மிகவும் அழகாவும், சுத்தமாகவும் இருப்பதோடு, இதன் அழகு அங்கு செல்வோரை அங்கேயே தங்கிவிட வேண்டுமென்ற எண்ணத்தை தரும் அளவில் இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s