தொன்மையான நகரம்
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரம் மதுரை ஆகும். இந்நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையானது, மதுரை வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும். இந்திய துணைகண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட நகரமாகும். பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாகவும் விளங்கியது. சங்க காலத்தில் தமிழ் சங்கங்கள் அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையது. இந்த நகரில் அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக இந்த நகரம் அதிகம் அறியப்படுகிறது.
சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் தாண்டி வந்தது இம்மதுரை நகரம். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையை ஆட்சி செய்த விசயன் என்ற மன்னன் தன்னுடைய பட்டத்தரசியாக மதுராபுரி (மதுரை) இளவரசியை மணந்ததாக இலங்கையின் பண்டைய வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பராசக்தியின் வடிவமான அன்னை மீனாட்சி பிறந்து, வளர்ந்து, ஆட்சிசெய்து, தெய்வமான இடமாகக் கருதப்படும் மதுரை, இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களின் மிக முக்கிய சக்திஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமன்றி, அன்றைய மன்னராட்சியின் ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகின்றன. தமிழ் வளர்ச்சிக்குத் தனியே சங்கம் வைத்து வளர்த்த பெருமையும் இந்த நகரத்துக்கு உண்டு என்று பழமையான வரலாறுகள் தெரிவிக்கின்றன.
பாண்டிய நாடு
பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில்,’தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை’ என்று குறித்தார்.
மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆனையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
மதுரையினு சொன்னா மீனாட்சி அம்மன் ,ஜல்லிக்கட்டு,ஜிகிர்தண்டா,மல்லி தான் நம்ம நினைவுக்கு வரும் வாங்க அத பத்தி பார்போம்!
மீனாட்சி அம்மன்
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விகிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை மாநகரையும் இந்த சிவசக்தி தலத்தையும் அமைத்ததாகக் கருதப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலைச்சுற்றி நான்கு மாடங்கள் அமைத்துள்ளதால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு. சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது. விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
சித்திரைத் திருவிழா
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி திருக்கல்யாணம், மீனாட்சி அம்மன் பட்டாபிசேகம், மீனாட்சியம்மன் தேரோட்டம், புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் தமிழ் மாதம் ஒவ்வொன்றிலும் சிறப்பு விழாக்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
மதுரை மாநகரையே குலுங்க வைக்கும் விழா, சித்திரை திருவிழா. குலுங்க வைக்கும் எனும் சொல்லும் போதே தெரியும் அது நம் கள்ளழகர் வைகையில் இறங்குவது தான் என்று.அந்தளவிற்கு தமிழகம் மட்டுமின்றி உலகின் பிற பகுதிகளிலும் இவ்விழா பிரபலமடைந்துள்ளது.முழுதாக ஒரு மாதம் எடுத்துக் கொண்டு உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்ட பண்டிகை இதுவாகத்தான் இருக்கும்.
மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் இந்த திருவிழாவை மிக விமர்சையாக கொண்டாடுகின்றனர். இப்பெருவிழாவின் முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் விழா நடைபெறுகிறது.
நிகழ்வுகள்
திருவிழாவின் முதல் நாள் நிகழ்வு கொடியேற்றம் ஆகும். அன்று இரவு கற்பக விருட்சகம் மற்றும் சிம்ம வாகனத்தில் சுவாமி உலா வருகிறது. அடுத்த நாள் பூதவாகனம் மற்றும் அன்ன வாகனதிலும், மறுநாள் கைலாசபர்வதம் மற்றும் காமதேனு வாகனதிலும் வீதி உலா வரும். நான்காம் நாள் தங்கபல்லக்கிலும் ஐந்தாம் நாள் தங்க குதிரையிலும் எடுத்து செல்வார்கள்.
ஆறு மற்றும் ஏழாம் நாள் முறையே ரிஷப வாகனம், நந்தீஸ்வரர் வாகனம் மற்றும் யாழி வாகனத்திலும், எட்டாம் நாள் பட்டாபிசேகம் நடைபெறும். இரவு வெள்ளி சிம்மாசன வாகனம் சுவாமி உலா வருகிறது.திக்விஜயம் மீனாட்சி இமயமலை சென்று போர் புரிவதை கூறும் வகையில் நடைபெறுகிறது.அன்று இரவு இந்திரா விமான வாகனம்.
மீனாட்சி திருக்கல்யாணம்
பத்தாம் நாள் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சுமங்கலிகள் புதிய தாலிக்கயிறு அணிவார்கள். வேண்டுதலுக்காக அன்று சில பக்தர்கள் கோவிலுக்கு வரும் அனைவருக்கும் புதிய தாலிக்கயிறு வழங்குவார்கள். அன்று இரவு யானை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கு வாகனம் சுவாமி உலா வருகிறது
தேரோட்டம்
திருக்கல்யாணம் முடிந்ததும் மறுநாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.தேரோட்டம் ஆனது நான்கு மாட வீதிகளிலும் அம்மன் மீனாட்சி சுந்தரேசுவரருடன் பவனி வருவார்.
அழகர் அவதாரம் தரித்த விஷ்ணு தன் தங்கையான மீனாட்சி திருமணதிற்கு அழகர் கோவிலில் இருந்து மதுரை நகருக்கு புறப்படுகிறார்.கள்ளர்களிடமிருந்து சீர்வரிசையை காக்க நாட்டுக்கள்ளர் போல் கொண்டையிட்டு, கண்டாங்கி கட்டி, காதில் கடுக்கன் அணிந்து, கையில் வளரியுடன் தங்க பல்லக்கில் கிளம்பி வருவார் (அதனாலே அவர் கள்ளழகர்).
‘வாராரு வாராரு அழகர் வாராரு’ என்ற பாட்டு மதுரை அனைத்தும் ஒலிக்கும். அந்த பாடலின் இடையில் வரும் இசை அனைத்து மக்களையும் ஆட செய்யும். வரும் வழியில் ஒவ்வொரு மண்டபமும் மக்களுக்கு ஊண் அருளழித்து வருவார்.
கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர் சேவை என்று கொண்டாடப்படுகிறது. அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பெருமாள் கோவிலை அட்டைகிறார். இரவு முழுவதும் அங்கு உள்ள அணைத்து மண்டபகளிலும் பக்தர்களுக்கு அருளளிப்பார் .
எதிர் சேவையின் போது அழகர் அணிய, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்(சூடித்தந்த சுடர்க்கொடி) திருக்கோவிலில் இருந்து மாலை வரும்.
மதுரை வைகை நதிக்கரையை அடைந்தத அழகரிடம் தங்கள் தங்கை திருமணம் முடிந்துவிட்டதே இபொழுதான் வருகிறீர்கள் என கூடலழகர் பெருமாள் தெருவிக்கிறார். அதை கேட்ட அழகர் தான் கொண்டுவந்த சீர் வரிசைகளை கூடழகர் பெருமாளிடம் கொடுத்துவிட்டு வைகை நதியில் இறங்கிவிட்டு திரும்புகிறார்.
அழகர் ஆற்றில் இறங்குதல்:
இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அமைவது, தண்ணீர் பீட்சுதல் நிகழ்வு. அழகரை வேண்டி பக்தர்கள் 15 to 20 நாட்கள் விரதம் இருந்து வேண்டுவார்கள். தான் வருவதற்க்குள் தன தங்கை திருமணம் செய்துகொண்டால் எனும் கோபத்தை தணிக்கவும், அழகர் மீது உள்ள தீட்டினை கழிக்கவும் தண்ணீர் பீச்சும் நிகழ்வு உள்ளதாக கூறப்படுகிறார்கள்.
ராமராயர் மண்டகப்படியில் அழகரை எழுந்தருளச் செய்து அங்கு அழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நேர்த்திக் கடன் நிறைவேற்றப்படுகிறது. தண்ணீர் பிட்சுபவர்கள் ஒவ்வெரு பகுதியல் இருந்தும் கூட்டமாகவே வருவார்கள்.அதில் தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்களுக்கு ஆடுவார்கள்.அவற்றை காண மட்டுமே திருவிழா போக ஆசை ஏற்படும்.பின் அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருவார். அங்கு விடிய விடிய மக்கள் வாண வேடிக்கையுடன் அழகரை தரிசிக்கின்றனர்.
மறுநாள் காலையில் அழகரை வண்டியூரில் வைகை நடுவே உள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், நாரைக்கு முக்தி அளித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.அப்போது சுத பஸ் மகரிஷியின் சிலை வைக்கப்பட்டிருக்கும். சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் விதமாக நாரை பறக்க விடப்படும்.
பின் இரவில் ராமராயர் மண்டபத்தில் அழகரை எழுந்தருளச் செய்து தசாவதாரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் முத்தங்கி, மச்சம், கூர்மம், வாமன, ராம, கிருஷ்ண அவதாரம் உள்ளிட்ட தசாவதாரத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கு காட்சியளிபார். பின் மறுநாள் ராமராயர் மண்டகப் படியிலிருந்து வைகைத் திருக்கண், ஆழ்வாரிபுரம், கோரிப்பாளையம் வழியே தல்லாகுளம் சேதுபதி மண்டகப் படியில் அழகர் எழுந்தருளுகிறார். இறுதியாக அழகர் கோவில் நோக்கி அழகர் புறப்பாடு நடைபெறுகிறது.
வரலாறு :
லட்சகணக்கான பக்தர்கள் திரள நடக்கும் இவ்விழா 400 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றுள்ளது.அப்போது மீனாட்சி சுந்தரர் திருமணத்தை மட்டுமே கொண்ட இந்த விழா சைவர்களின் முக்கிய பண்டிகையாக கருதப்பட்டது.அன்றைய காலத்தில் சோழவந்தன் எனும் இடத்தில் தான் நடந்தது.பின்னர் திருமலை நாயக்கர் காலத்தில், சைவம் மற்றும் வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் பொருட்டு, திருக்கல்யாணத்தோடு அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா இணைக்கப்பட்டது.
சைவ மற்றும் வைணவ சமயங்கள் ஒன்றாக கொண்டாடும் திருவிழா இதுவே ஆகும்.
புராணக் கதையின் படி, மலையத்தவ பாண்டியன் மற்றும் ராணி காஞ்சனமாலாவின் மகளாக அக்னியில் தோன்றினாள் மீனாட்சி.சிறு வயது முதலே போர் கலைகளில் சிறந்தவளாக திகழ்ந்து உலகின் எல்லா பகுதிகளையும் வெற்றி கொண்ட மீனாட்சி, இறுதியாக கயிலாயம் சென்று சிவபெருமானுடன் போரிட்டார்.அக்கனமே அவர் மேல் காதல் வயப்பட்டு, தான் பார்வதியின் அவதாரம் என்பதையும் உணர்ந்துக் கொள்கிறார்.
தன் அவதாரத்தின் காரணத்தை அறிந்த சக்தி ஈசனின் கரம் பிடிக்க வேண்டுகிறாள். சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி க்கு திருமணம் நிச்சம் செய்யப்படுகிறது பின் இத்திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுகிறது.மீனாட்சியை திருமணம் செய்த பிறகு மதுரையை ஆளும் செங்கோல் சுந்தரேஸ்வரரிடம் கொடுக்கப்படுகிறது. பாண்டிய நாட்டை ஆளுவதால் சுந்தரபாண்டியன் எனும் பேரால் குறிப்பிடுகிறார்.இதனோடு திருவிழா முடியும்.ஆனால் அக்காலத்தில் இடம்பெற்ற சைவ வைணவர்களின் மோதல்களை தவிர்க்க முயன்று ஒரு புனைவு கதை சேர்க்கப்பட்டது.
தன் தங்கை திருமணத்திற்க்கு செல்லும் அழகர், திருமணம் முடிந்தது என்று தெரிந்ததவுடன், வைகை நதியில் இறங்கி திரும்புவதாக இந்த புதிய புராண கதைகள் சொல்கிறது. இன் நிகழ்வு நடைபெருவதற்கான காரணம் மண்டூக ரிஷி அவர்களின் சாப விமோசனம் தருவதற்காக என கூறப்படுகிறது.
ஒரு முறை மண்டூக ரிஷி நதியில் குளித்துக் கொண்டிருக்கும்பொது துர்வாச முனிவர் அங்கு வருகிறார்.அவர் வருவதை காணாத மண்டூக ரிஷியை, தன்னை அவமதித்து விட்டார் என துர்வாச முனிவர் மண்டூகருக்கு வைகை நதியிலே நீ தவளையாக இருப்பாயாக என சாபம் விடுகிறார். அவரது சாப விமோச்சனம் போக்கவே கடவுள் விஷ்ணு அவதாரம் எடுத்து வருவதாக இந்நிகழ்வு கூறப்படுகிறது.
சிறப்புகள் :
அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் பல்லகில் மதுரை நோக்கி வரும் வழயில், மண்டபங்களில் ஓய்வெடுத்து நிதானமாக வருகிறார். வைகயில் அழகர் இறங்கும் முன் விசிறி, குடை முன்னே வரும். விசிறி மற்றும் குடை யை அடையாளம் கண்டு அழகர் வரவிருக்கிறார் என்றே கூரலாம்.”சாமி இன்னிக்கு எங்க இருக்குது” என்பதே சித்திரைத் திருவிழாவில் முக்கியமான கேள்வியாக மக்களிடையே இருக்கும்.
அழகர் என்ன பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவும். பச்சை பட்டு உடுத்தி இறங்கினால் அந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்து பசுமையான ஆண்டாக இருக்கும் என நம்பப்படுகிறது. அழகர் வரும்பொழுது அவர் ஆற்றில் இறங்குவதற்க்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.கடந்த சில வருடங்களாக பச்சை பட்டு உடுத்தி இறங்கியும் வைகை அணையில் தண்ணீர் இல்லாததால், அழகர் வாய்கால் அளவுள்ள நீரில் இறங்குகிறார் என்பது வேறு விஷயம்.
அழகர் திருவிழா நடைபெறுவது கோடைகாலத்தில்.அதனால் அழகர் வரும் பாதை முழுவதும் நீர், பானகம் மற்றும் மோர் பந்தல்கள் பக்தர்களினால் அமைக்கப்பட்டிருக்கும் அழகரைக் காண வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கவே. அழகர் வரும்பொழுது மக்கள் தங்கள் கைகளின் வெல்லம் மற்றும் பொரிகடலை கலந்த பிரசாதத்தை ஒரு சொம்பில் வைத்து வாழை இலையால் மூடி, அதன் மேல கற்பூரத்தைக் கொளுத்தி, தாங்களாகவே அழகரை நோக்கி ஆரத்தி எடுத்துக்கொள்வார்கள்.
பலியிடல், மொட்டை போடுதல்,நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும் மேற்கொள்ளப் படுகின்றன. கள்ளழகர் வேடமிட்ட பக்தர்கள் வெயிலின் உக்கிரத்தை குறைக்க மக்களின்மேல் நீரை பீய்ச்சி அடிப்பார்கள். விசிறிகள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும். அன்னதானம் நடைபெறும்.
இந்த திருவிழாவிற்க்கு வெளி மாவட்டங்களில் இருந்ததும் பல லட்ச பக்தர்கள் வருவார்கள்.அழகரை கண்ட பக்தர்கள் அனைவரும் கோவிந்தா என்ற முழக்கம் அனைவரையும் ஆர்பரித்துவிடும்.இத்திருவிழாவின் போது மதுரை தமுக்கம் மைதானத்தல் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி சிறப்பு வாய்ந்தது. கோடை விடுமுறையின் போது இவ்விழா கொண்டாடப்படுவதால் பெரியவர் முதல் சிறியவர் வரை இந்நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொள்கின்றனர்.
திருகல்யாணத்தின் போது தினமும் மாலை சாமி வீதி உலா செல்லும் முன் கிராமிய நிகழ்சிகள் நடைபெறும். சிறுவர் சிறுமிகளின் கோலாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், சாமியாட்டம், அனுமன்ஆட்டம், கருப்புச்சாமியாட்டம், தெய்வங்களைப் போல் மாறுவேடம் அணிந்து ஆடி வருவார்கள். மேலமாசி வீதி முருகன்கோயில் அருகே பூக்கொட்டும் பொம்மைககள் மற்றும் மாலையிடும் பொம்மைகளை காணப்படும்.
திருவிழாக்களின் நோக்கமாக அமைவது, ஒற்றுமை. நண்பர்கள் உறவினர்களிடம் என்னதான் பிரச்சினை இருந்தாலும் பண்டிகை என்றவுடன் ஒன்றாய் சேர்ந்து கொண்டாடுவர். அதிலும் சித்திரை திருவிழா பல நாட்கள் நடைபெறுவதாலும், கோடை விடுமுறையாலும், வெளி ஊரில் இருக்கும் சொந்தங்கள், சிறுவர்கள் வந்து தங்கி திருவிழாவை கொண்டாடுகின்றனர். தற்போதையா நவீன வாழ்க்கையில் இவை போன்ற திருவிழா தான் நம் பாரம்பரியத்தை நினைவுபடுத்துகிறது.இது ஒரு இந்து சமய திருவிழா மட்டுமல்ல சாதி, மதம் அனைத்தையும் கடந்து மதுரை மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய தமிழ் சமூக விழா, பெருமைமிகு சித்திரை திருவிழா ஆகும்.
திருவிழா நகரம்
மதுரையை சுற்றியுள்ள ஊர்களில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெற்று கொண்டிருக்கும்.
இதில் முக்கியமான திருவிழாக்கள் வண்டியுர் மாரியம்மன் தெப்ப திருவிழா ,திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஆவாணி திருவிழா ஆகியவை அடங்கும்
ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு)
மதுரை மக்களின் வீரத்தோடு தொடர்புடையது ஏறுதழுவுதல்
மதுரையில் ஆண்டுத்தோறும் நடைபெறும் அலங்கங்நல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றது.
இது தவிர மதுரையை சுற்றியுள்ள ஊர்களிலும் பொங்கல் பண்டிக்கையின் போது மிகச்சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும்.
ஜிகிர்தண்டா
மதுரைக்கு மல்லி மட்டும் பேமஸ் இல்லிங்க ஜிகிர்தண்டா தான் இப்போ ரெம்ப பேமஸ் அதுலயும் ந்ம்ம கீழவாசல் ஜிகிர்தண்டா சும்மா தெறிக்கவிடும்.
பொழுதுபோக்கும் இடங்கள்
நம்ம மதுரையில் அதிசியம், ராஜாஜி பார்க், எகோ பார்க், தங்கரீகல்,சினிபிரியாகாம்பிளாக்ஸ் ,
வெற்றி,ஐநாக்ஸ்,பிக் சினிமாஸ், அபிராமிகாம்பிளாக்ஸ்,அம்பிககாம்பிளாக்ஸ் போன்றவைகள் உள்ளன.
புதுவரவு
விசால் டி மால் என்ற மிகப்பெரிய ஸாப்பிங் மால் உள்ளது.
இதில் அதி நவீன தொழில் ஐநாக்ஸ் திரை அரங்கம் உள்ளது மேலும் பல்வேறு பொழது போக்கு அம்சங்கள் இருக்கின்றன.
தி சென்னை சில்கஸ் ,போத்திஸ் ,ஏகே அகமத், போன்ற மிகபெரிய ஜவுளி மாளிகை உள்ளது
ஹோட்டல்
நம்ம மதுரையில் தான் எத்தன மணிக்கு போன கூட சாப்பாடு கிடைக்குமிடம்.
அதனால தான் அதற்கு தூங்க நகரம் பெயர் வந்தது பல உணவகங்கள் இருந்தாலும் குறிபிட்ட சில சிம்மக்கல் கோனார் கடை,,அம்மா மெஸ்,மாட்டுதாவணி மெரினா,சபரி,பெல் போன்றவை சிறந்த உணவகங்கள் ஆகும்.
தூங்காநகரம்
உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விழித்திருக்கும் ‘தூங்காநகர்’ ஒன்று தமிழகத்திலுள்ளது. அந்நகர் எதுவென உங்களுக்குத் தெரியுமா? ஆண்டின் எல்லா நாளிலும் விழாக்கள் கொண்டாடியபடி இருப்பதால், திருவிழாநகர் என்னும் பெருமை பெற்ற நகரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாற்றிசையிலும் கலையழகு பொருந்திய மாபெருங் கோபுரங்களோடு எட்டுச்சிறிய கோபுரங்களையும் கொண்டு எழில்மிகு சிற்பக்கலைக் கூடமாக விளங்கும் கோயில் மாநகர் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத்தொட்டிலாத் திகழ்ந்த தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப் புகழ்பெற்ற நகருக்கு நீங்கள் சென்றது உண்டா? சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்த நகரம், முன்பு பாண்டியர்தம் தலைநகராக விளங்கிய நகரம், இன்றைய தமிழகத்தின் இரண்டாவது பெருநகரமாகத் திகழும் நகரம் எதுவெனத்தெரியுமா? இத்துணைச் சிறப்புக்கும் உரிய நகரம் மதுரை என்னும் மாநகரம்.
எனவே நானும் மதுரைக்காரன் என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
I love my city madurai. I’m proud about my city
LikeLiked by 1 person
I’m also maduraikaran
LikeLike