முள் முருங்கையின் பயன்கள்

முள்முருங்கை

முள்முருங்கை மர வகையை சார்ந்தது. இந்த மரத்தை வேலி அமைப்பதற்காக வளர்க்கிறார்கள். முட்களை கொண்ட மென்மையான கட்டைகளை உடையது இந்த மரம். இதன் இலைகள் அகன்று பெரியதாக இருக்கும். ஒரு காம்பில் மூன்று இலைகள் காணப்படும். மேல் பகுதியில் ஒன்றும், இரு பக்கமும் இரண்டும் காணப்படும். இதன் பூக்கள் சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாக தோன்றும். இதற்கு கல்யாண முருங்கை என்ற பெயரும் உண்டு.

bcef2661f4472ff5f34ac346c31fcd9d13c6a932

இது துவர்ப்பும், கசப்பும் கலந்தது. பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் கடுமையான வலி ஏற்படும். இதற்கு முள்முருங்கை இலைசாற்றை 50 மி.லி எடுத்து, மாதவிலக்கு ஆரம்பிக்கும் ஐந்து நாட்களுக்கு முன்பிருந்து தினமும் பருகவேண்டும். வலி கட்டுப்படும். இந்த சாற்றில் 10 மி.லி. எடுத்து, வெந்நீர் கலந்து பருகினால் கபம், இருமல் நீங்கும்.

ஒரு தேக்கரண்டி முள்முருங்கை இலைசாற்றை மோரில் கலந்து சாப்பிட்டால் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.

முள் முருங்கை இலைசாற்றில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று பூச்சிகள் தொந்தரவு கட்டுப்படும்.

பத்து இலைகளை நறுக்கி, 50 கிராம் சிறிய வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கி, நல்லெண்ணெய்யில் வதக்கி பிரசவமான தாய்மார்கள் சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும்.

பெண்களுக்கு நாற்பது வயது நெருங்கும்போது இடுப்பு பகுதி பெருத்துப்போகும். அவர்கள் கல்யாண முருங்கை கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு கொழுப்பு நீங்கி இடை மெலியும்.

Erythrina-indica--e1459803524991

முள்முருங்கை பூ கர்ப்ப நோய்களுக்கு சிறந்த மருந்து. சுவாசகாசம் என்னும் மூச்சிரைப்பு நோய் அதிகரிக்கும்போது அரிசிக்கஞ்சியில், பூண்டுவை வேகவைத்து அதில் 30 மி.லி முள்முருங்கை சாறு கலந்து சாப்பிட்டால் கபம் வெளியேறி மூச்சிரைப்பு கட்டுப்படும்.

முள் முருங்கை இலையை ஆமணக்கு எண்ணெய் தடவி இளஞ்சூட்டில் வீக்கம் உள்ள இடத்தில் கட்டினால் வீக்கம் குறையும். மூட்டு வலிக்கு இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கவேண்டும்.

முள்முருங்கை கீரை காய்கறி அங்காடிகளில் கிடைக்கும்.

வடை

  1. முள் முருங்கை இலை-1 கட்டு
  2. மிளகு -1 தேக்கரண்டி
  3. சித்தரத்தை-10 கிராம்
  4. புழுங்கல் அரிசி- 200 கிராம்
  5. உப்பு- தேவைக்கு
  6. எண்ணெய்-பொரிப்பதற்கு

செய்முறை:

முள் முருங்கை இலையை நரம்புகள் நீக்கி பிரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
புழுங்கல் அரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவையுங்கள்.

மிக்சியில் மிளகு, சித்தரத்தையை கொட்டி தூளாக்கி, அத்துடன் முள் முருங்கை இலை, புழுங்கல் அரிசியை சேர்த்து சற்று பிசிறாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும், எலுமிச்சம்பழ அளவு மாவு எடுத்து வடையாக தட்டி எண்ணெய்யில் இட்டு பொரித்தெடுக்கவும். இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் சளி, இருமலுக்கு இது ஒருவகையில் மருந்தாகவும் செயல்படும். உடல் வலியும் நீங்கும்.

தோசை

  1. முள் முருங்கை இலை-10
  2. புழுங்கல் அரிசி- 200 கிராம்
  3. உளுத்தம் பருப்பு -50 கிராம்
  4. மிளகு -1 தேக்கரண்டி
  5. சிறிய வெங்காயம்-100 கிராம்
    (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
  6. உப்பு-தேவைக்கு
  7. நல்லெண்ணெய்-தேவைக்கு

PGR_1978

செய்முறை:

முள்முருங்கை கீரையின் நரம்புகளை நீக்கி சுத்தம் செய்து இலைகளை நறுக்கி வையுங்கள்.

புழுங்கல் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வையுங்கள்.

மிக்சியில் கீரை மற்றும் மிளகை நன்கு அரையுங்கள். தனியாக உளுந்து மற்றும் அரிசியை அரையுங்கள். அத்துடன் அரைத்து வைத்துள்ள கீரை மற்றும் உப்பு கலந்து நன்றாக கலக்குங்கள். பின்பு தோசையாக வார்த்தெடுங்கள்.
இந்த மாவை புளிக்கவைக்க வேண்டியதில்லை. அரைத்தவுடன் தோசை வார்க்கும்போது, அதில் சிறிதளவு வெங்காயத்தை நறுக்கியும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த தோசையை சூடாக சாப்பிட்டால் அதிக சுவை தரும். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு இது சிறந்த உணவு. மூட்டு வலிக்கும் ஏற்றது. இந்த தோசைக்கு தேங்காய் சட்னி சேர்த்து சுவையுங்கள்.

பூரி

  1. முள் முருங்கை இலை-10
  2. கோதுமை மாவு -250 கிராம்
  3. மிளகு தூள்-1/2 தேக்கரண்டி
  4. உப்பு-தேவைக்கு
  5. எண்ணெய்-தேவைக்கு.

thondaikku-itham-navirku-ruchi-thoothuvalai-poori-fb

செய்முறை:

முள்முருங்கை கீரையை சுத்தம் செய்து அரைத்தெடுங்கள்.
கோதுமை மாவுடன், அரைத்து வைத்துள்ள கீரை, மிளகு தூள், உப்பு கலந்து தேவையான நீர் சேர்த்து கெட்டியாக பிசையுங்கள். மாவை, எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக்கி, பூரி அளவில் உருவாக்கி எண்ணெய்யில் பொரித்தெடுங்கள். எண்ணெய்யை சேர்க்க விரும்பாதவர்கள், மாவை ரொட்டி போன்று தயார் செய்து, தோசைக்கல்லில் போட்டு வேகவைத்தும் சுவைக்கலாம்.