சென்னை: திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு புறப்படவுள்ள மகாராஜா என்ற சொகுசு ரயிலில் 8 நாள்கள் சுற்றுலா செல்ல ரூ. 5 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் ஐஆர்சிடிசியானது கடந்த 2010-ஆம் ஆண்டில் மும்பை- டெல்லி- கொல்கத்தா இடையே மகாராஜா எக்ஸ்பிரஸ் என்ற சொகுசு ரயிலை இயக்கி வருகிறது.
இந்த ரயிலானது முதல்முறையாக வரும் ஜூலை 1-ஆம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து மும்பைக்கு இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதுர்அதில்
உலகின் மிகப் பிரபலமான
உலகின் மிகப் பிரபலமான 5 சொகுசு ரயில்களில் மகாராஜா எக்ஸ்பிரஸ் ரயில் 2-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தமிழ் கலாசார உணவு வரும் ஜூலை 1-ஆம் தேதி இரவு 9 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் .
இந்த ரயிலானது நாகர்கோவில் வழியாக காரைக்குடிக்கு 2-ஆம் தேதி காலை சென்றடையும். தமிழ் கலாசார உணவு வழங்கப்படுகிறது. கட்டடங்கள், ஆத்தங்குடி தரை ஓடுகள் செய்யும் இடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு சுற்றி காண்பிக்கப்படுகிறது.
திடீர் திடீரென மாயமாகும் தீவுகள்..பீதி கிளப்பும் பிசாசு கடல்!.
பிசாசின் கடல்..கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால்.. இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’.அதாவது டிராகன் முக்கோணம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசின் கடல். ஜப்பானிய மொழியில் ‘மா-நோ-உமி’ என்கிறார்கள். இதன் வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லையாம்.
இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை. இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துகிறது.
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப்பந்தின் மறுபுறத்தில்தான் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி இருப்பதால் மக்களை அதிகம் பீதிக்கு உள்ளாக்குகிறது ‘மா-நோ-உமி’ முக்கோணம். பெர்முடா முக்கோணம் போல மாநோஉமி வழியாக செல்லும் கப்பல்கள், விமானங்களும் அடிக்கடி மாயமாகியிருக்கின்றன.
1952 – 1954 காலகட்டத்தில் டிராகன் முக்கோண கடல் பகுதி வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த கப்பல்களில் பயணித்த 700 பேரின் நிலை பற்றியும் தெரியவில்லை.இதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வரவில்லை.
டிராகன் முக்கோணம்
அதற்கு பிறகு ஜப்பான் அரசு சுதாரித்துக் கொண்டு அப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்தது என்கிறார்கள் டிராகன் முக்கோணம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள். விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் வேறுமாதிரி சொல்கிறார்கள். ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் எரிமலைகள் வெடிப்பது, நில அதிர்வு காரணமாக கடலின் மேல் பகுதியில் திடீர் அலைகள் உருவாகின்றன. அதில் சிக்கும் கப்பல்கள் விபத்துக்குள்ளாகின்றன.
டிராகன் முக்கோண பகுதியில் சில தீவுகள்கூட திடீர் திடீரென மாயமாகின்றன. திடீரென புதிதாக தீவுகள் உருவாகின்றன. இதற்கெல்லாம் கூட கடல் அடியில் ஏற்படும் நிலநடுக்கமும் எரிமலைகளும்தான் காரணம் என்கின்றனர்.நெருப்பை கக்கும் டிராகன்கள்தான் இதற்கு காரணம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர். ‘மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்துவிட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன’என்கின்றனர் அவர்கள். பெர்முடா முக்கோணம் போலவே.. இன்னமும் மர்மமாக இருக்கிறது பிசாசு கடல்….!
இந்த கடலை பற்றி ஒரு ஹாலிவுட் திரைப்படம் எடுத்தால் மக்கள் மிகுந்த எச்சரிக்கை உடன் இருப்பார்கள்!
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போரட்டம் அவர்களின் ஒற்றுமையை அதிகரிக்கிறது
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
இது தான் எங்க ஊரு நீ முறைச்ச நாங்க முறைப்போம் நீ அடிச்ச நாங்க அடிப்போம்!
இது மாட்ட பத்தின பிரச்சனை இல்லை நாட்டை பத்தின பிரச்சன!
பெங்களூரில் விடிந்தும் விடியாமலும் ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழர்கள்
பெங்களூரில் உள்ள அல்சூரில் இருக்கும் தமிழ்ச் சங்க கட்டிடத்திற்கு வெளியே ஏராளமான இளைஞர்கள் கூடியுள்ளனர். தமிழ் இளைஞர்கள் அமைதியான முறையில் போராடி வருகிறார்கள்.
தொடரும் போராட்டம்:
அவசரச் சட்டத்தை எல்லாம் காட்டி மாணவர்களை ஏமாற்றி விட முடியாது என்று கூறி நிரந்தர சட்டம் வேண்டி போராட்டக்காரர்கள் இடத்தை விட்டு அகலாமல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னை, அலங்காநல்லூர், திண்டுக்கல், கரூர், வேதாரண்யம், நாகை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஏமாற்று வேலை
ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழகம் முழுவதும் பல மடங்கு வேகத்துடன் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு எந்த இடத்திலும் நடந்து விடக் கூடாது என்பதில் போராட்டக்கார்கள் கண்ணும் கருத்துமாக இருந்து தடுத்து வருகின்றனர். அலங்காநல்லூரில் அரசு வாகனங்கள் எதுவும் வந்து விடக் கூடாது என்று இன்று காலை முதல் சாலையில் மக்கள் திரண்டு அமர்ந்து மறியல் செய்து வருகின்றனர்.
உறுதி குலையாது..
பெண்கள், மாணவிகள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சற்றும் சளைக்காமல் முன்னை விட அதிக உறுதியுடன் தற்போது போராடி வருகின்றனர். அவரசச் சட்டம் என்பது ஒரு ஏமாற்று வேலை என்று போராட்டக்காரர்கள் உறுதியாகக் கூறி அதனை நிராகரித்துள்ளனர். இதனால் இன்று அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த முடியவில்லை. நமக்கு நல்ல பெயர் கிட்டும் என்று நினைத்த முதல்வர் ஓபிஎஸ் என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்.
அதிகரிக்கும் பெண்கள்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு பெண்களின் பங்கு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று போராட்டத்தில் மாணவிகள், பெண்கள் கலந்து கொண்டு வீட்டிற்கு செல்லாமல் தங்களது எதிர்ப்பை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தில் இரவெல்லாம் கலந்து கொள்ள முடியாத குடும்பத் தலைவிகள் போராட்டக்காரர்களுக்கு தேவையான உணவு சமைத்து, போராட்டக்களத்திற்கு கொண்டு போய் கொடுத்துவிட்டு வருகிறார்கள். இப்படி பெண்களின் ஆதரவையும் அதிக அளவில் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கண்ட மத்திய, மாநில அரசுகள் இதனை எப்படி அடக்குவது என்பதையே யோசித்து வருகிறது. மாறாக நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
அவசரச் சட்டம் வேண்டாம்.. எழுச்சி குறையாத மக்கள் போராட்டம்:
சென்னை: அவசரச் சட்டத்திற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் ஓகே சொல்லிவிட்டு போராட்டத்தை கைவிட்டு விடுவார்கள் என்று நம்பிய தமிழக அரசு திக்குமுக்காடிப் போயுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று இளைஞர்கள், பெண்கள் தொடர்ந்து போராடி வருவதைக் கண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று ஒரு சிறு பொறி போல சென்னையில் ஜனவரி 8ம் தேதி மெரினாவில் இளைஞர்கள், மாணவர்கள் கூடி பெரிய பேரணி ஒன்றை நடத்தினார்கள். அது இன்று அணைக்க முடியாத தீயாய் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
Madurai: Hundreds of youths who have gathered from southern districts, participating in a protest demanding the Central government to lift the ban on Jallikattu, in Madurai on Tuesday. PTI Photo (PTI1_11_2017_000237B)
பொங்கல் திருவிழாவின் போது அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் இரவு பகலாக நடந்து வந்ததையடுத்து, சென்னையிலும் இரவு பகலாக இளைஞர்கள், மாணவ, மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனை எதிர் பார்க்காத தமிழக அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
அதிர்ச்சியில் அரசுகள்
தமிழக மக்களின் இந்த எழுச்சியான கட்டுக்கோப்பான போராட்டத்தைக் கண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறது. பீட்டாவிற்கு ஆதரவாகவும், ஆர்.எஸ்.எஸ். கொள்கையை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்காகவும் மோடி அரசு படாத பாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதனை விரட்டியடிக்க இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் இணைந்திருப்பது அச்சத்தோடு பார்த்து வருகிறது மத்திய அரசு. தமிழக மக்களை ஏமாற்று வேலைகள் செய்து கவிழ்த்துவிட முடியாது என்று இப்போது மத்திய அரசுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.
தமிழக வரலாற்றில் முதல் முறை: முதல்வரை விரட்டியடித்த கிராம மக்கள்:
அலங்காநல்லூருக்குள் நுழைய முடியாமல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது திட்டத்தை மாற்றியுள்ளார். கிராமத்திற்குள் நுழைய முடியாமல் ஒரு முதல்வர் திரும்புவது இதுவே முதல் முறை ஆகும்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்த தமிழக அரசின் நடவடிக்கையை மக்கள் ஏற்கவில்லை. இருப்பினும் வலுக்கட்டாயமாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டை நடத்த அரசு திட்டமிட்டது
இதற்காக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மதுரை சென்றனர். வம்படியாக ஜல்லிக்கட்டை நடத்த அலங்காநல்லூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரு காளையை கூட தர மாட்டோம் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். மேலும் முதல்வர் வராமல் இருக்க அலங்காநல்லூரை சுற்றி சாலைகளில் குழி தோண்டி போக்குவரத்தை பாதிக்கச் செய்துள்ளனர் மக்கள். இதையடுத்து முதல்வர் அலங்காநல்லூருக்கு பதிலாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்த திட்டமிட்டார். அங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் தமிழக அரசின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
ஒரு கிராமத்திற்குள் நுழைய முடியாமல் முதல்வர் திரும்புவது இதுவே முதல் முறை ஆகும். ஜல்லிக்கட்டு காளைகள் இன்று துள்ளி ஓடும். அவற்றை நானே அவிழ்த்துவிடுவேன் என்று முதல்வர் தெரிவித்தது எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நானும் தமிழ் மண்ணின் மைந்தன் தான் – மார்க்கண்டேய கட்ஜூ பெருமிதம்
தமிழர்களிடம் அன்புள்ளமும், பெருந்தன்மையும் இருப்பதால்தான் நான் தமிழர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘நானும் ஒரு தமிழன்’ என்று அடிக்கடி பெருமையுடன் சொல்லிக் கொள்வது உண்டு என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பெருமிதத்தோடு கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் மார்க்கண்டேய கட்ஜூ கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். விரைவில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். தமிழக மக்களின் போராட்டம் வெற்றியை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தை மார்கண்டேய கட்ஜூ பாராட்டி உள்ளார்
இந்நிலையில் நானும் ஒரு தமிழன் தான் என மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது பேஸ்புக் பதிவில், எனக்கு மறுபிறவி மீது நம்பிக்கை கிடையாது. ஒருவேளை மறுபிறவி இருப்பது உண்மையெனில், எனது முந்தைய பிறவியில் நான் நிச்சயம் தமிழனாக பிறந்திருப்பேன். நான் ஒவ்வொரு முறை தமிழகத்திற்கு வரும் போதும், எனது சொந்த வீட்டிற்கு வருவது போன்றே உணர்கிறேன். எனக்கு தமிழகத்தில் நிறைய நண்பர்கள் உள்ளனர். என் மீது தமிழர்கள் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.
சென்னை: சென்னையில் பேய்க்காற்று வீசுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் கனமழையுடன் பேய்க்காற்று வீசி வருகிறது. தற்போது சென்னையில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
காற்று சூழற்றியடிப்பதால் மரங்கள், மின்கம்பங்கள், விளம்பரப் பலகைகள் சாய்ந்து வருகின்றன. சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளில் இருந்தாலும் காற்றின் பேயிரைச்சல் சப்தத்தை கேட்டு பயத்தில் உள்ளனர். எங்கள் வாழ்வில் இப்படி ஒரு பேய்க்காற்றை பார்த்ததே இல்லை என்று சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
டிசம்பர் வெள்ள பாதிப்புக்கு சற்றும் குறையாமல் விளாசி எடுக்கும் “வர்தா”.. நிலை குலைந்தது சென்னை! கடந்த 2015ல் ஏற்பட்ட டிசம்பர் வெள்ள பாதிப்புக்கு சற்றும் குறையாத சேதத்தை ஏற்படுத்தி வருகிறது வர்தா புயல். சென்னை முழுவதும் பேய்க்காற்றால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வெள்ளத்தின்போது ஏற்பட்ட பாதிப்புக்கு இணையான பாதிப்பை தற்போது வர்தா புயல் மூலம் சந்தித்துள்ளது சென்னை. சுழற்றியடித்து வீசும் பேய்க்காற்றால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. புயல் கரையைக் கடக்கவுள்ள நிலையில் சென்னையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாறு காணாத பேய்க்காற்று வீசி வருகிறது.
இதற்கு முன்பு பலமுறை இதுபோன்ற சூழலை மக்கள் சந்தித்திருந்தாலும் இப்போது மிகக் கடுமையான காற்று வீசி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காற்றின் வேகத்தால் பெரிய பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. வாகனங்களை ஓட்ட முடியாமல் மக்கள் திணறும் நிலை உள்ளது. நடக்க முடியவில்லை. நடந்தால் தடுமாறி விழ வேண்டியதுதான்.
ஜன்னல் கதவுகள் உடைந்தன
நகர் முழுவதும் பலஇடங்களில் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. மழை நீர் தேங்கிக் கிடக்கின்றன. பல இடங்களில் வீடுகளின் கதவு, ஜன்னல்கள் உடைந்துள்ளன. வாட்டர் டேங்குகள் பறந்துள்ளன.
மீனவர்கள் கடும் பாதிப்பு
படகுகள் சேதம் பழவேற்காடு பகுதியில் கடலோரத்தில் உள்ள மீனவ குப்பங்களுக்குள் கடல் நீர் புகுந்ததால், சில வீடுகள் வெள்ளக்காடாக காணப்படுகின்றன. இங்குள்ள கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 50 படகுகள் சேதம் அடைந்தன.
ரயில்கள் ரத்து
சென்னை கடற்கரை – தாம்பரம், சென்ட்ரல் – ஆவடி, சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையம் பகுதியில் பலத்த காற்றுடன், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாகவே புறப்பட்டுச் செல்கின்றன. பிற்பகலில் இயக்கப்படும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன.