உலகதாய்மொழி தினம் – நம்ம தமிழ்நாட்டில்

மதுரை பாஷை

   பொட்ட புள்ளங்க சூதானமா இருங்கப்பு… மதுரையின் பாசமான பாஷை

உலக தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படும் இந்த நாளில் நான் பிறந்து வளர்ந்த என் மதுரை மண்ணின் பாசமான வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முரட்டுத்தனமாக கரடு முரடாக இருந்தாலும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசம் இழையோடுவதை உணர முடியும்.

1373351457458image

மதுரைக்காரவங்க ஒண்ணு கூடினா போதும் அங்கே அவர்கள் பேசும் பாஷையை கேட்க கேட்க ஒருவித நேசம் இளையோடும். வயது மூத்த ஆண்களைப் பார்த்தால் அண்ணே… என்றும் பெண்களை அக்கா என்றும் ஒருவித ராகக்தோடு அழைப்பதை கேட்க முடியும். ஒவ்வொரு வார்த்தையிலும் ஒருவித நேசம் இழையோடும், கோபப்பட்டாலும் குணத்தோடு பேசுவார்கள் மதுரை மண்ணின் மக்கள்

tamilnadu_madurai_vandiyur-mariamman-teppakulam-temple-in-madurai

என்னத்த அங்கிட்டு பாத்துக்கிட்டு… இங்கிட்டு வா… என்ன நின்டு போயிர போவுது… பய்ய போலாம் ஒண்ணும் கொறஞ்சு போயிறாது என்பார்கள். வெள்ளனெ வீட்டுக்கு வரணும்னு நினைச்சேன்… ஆனா அசந்துட்டேன்… விடிஞ்சிருச்சு. உசக்க தலைய தூக்கி பாக்கறேன் சாவல காணோம் என்பார்கள். பொட்டப்புள்ளங்கள பாத்து பல்ல காட்டாதீங்க… வஞ்சி புடுவாங்கடா…அவங்க பேச மாட்டாங்க அப்புறம் அருவாதாண்டா பேசும் என்று எச்சரிப்பார்கள். என்னத்த பெறாக்கு பாத்துக்கிட்டு சோலிய பாப்பியா… கோளார இருக்கணும்பா… என்று ஒருவித சூதானத்தோடு பேசுவார்கள். அவிங்க வந்தாய்ங்களா? எங்கிட்டு போனாய்ங்க? ஒரு லக்குல நிக்க மாட்டமா திரியிறாங்க என்பார்கள். ஒரே அலப்பறையா இருக்கேப்பா.. லந்த குடுத்திருச்சு அந்த புள்ள என்று அசால்டாக சொல்வார்கள் இளவட்டங்கள். இப்படியே பேசிட்டு இருந்தா ஏழ்ரய கூட்டிருவாணுங்க… ஆட்டும் அப்றம் பாக்கலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிட்டே இருப்பார்கள் மதுரைக்கார மண்ணின் மைந்தர்கள். தாய்மொழி தினத்தில் எனக்கு தெரிந்த என் மதுரை மண்ணின் பாஷையில் இருந்து சில வார்த்தைகளை எழுதியுள்ளேன். மதுரை மக்களே நீங்களும் உங்க பங்குக்கு எழுதுங்கப்பு.

கோவை பாஷை

     இல்லீங்… என்ட்ர ஊரு கோயமுத்தூருங்கோ… மயக்கும் கொங்குத்தமிழ்

 உலக தாய் மொழி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் இயல்பான மரியாதையோடு தவழ்ந்தாடும் கோவை பாஷை குறித்த சில சுவாரசிய தகவல்கள் தமிழக மக்கள் தமிழ் மொழியே பேசினாலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு.

Coimbatore.jpg

நெல்லைக்கு ஏலே

அவர்கள் பேசும் பாஷையும் வித்தியாசமானது. சென்னை என்றால் இன்னா? நெல்லைக்கு ஏலே.. கோவைக்கு சென்றால் ஏனுங்க, இல்லீங், அம்மணி என ஒவ்வொரு மண்டல மக்களும் தங்களுக்கான பாஷையில் அள்ளி தெளிப்பார்கள்.

மரியாதை கலந்த கோவை பாஷை கொங்கு மண்டலத்துக்குள் வரும் கோவையில் கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும். கோவை மக்கள் பேசும் சாதாரண வார்த்தைகளிலேயே இயல்பான மரியாதை கலந்து மண் மணம் வீசும்.

courtallam-mainfalls

வெள்ளந்தி தனத்தைக் காட்டும் கோவை பாஷையில் மரியாதை மட்டுமின்றி அன்பும் கலந்தே இருக்கும். அவர் கேள்வியாகட்டும் அல்லது பதிலாகட்டும் அந்த பாஷையே ஒரு வெள்ளந்தி தனத்தைக் காட்டும்.

ஏனுங் நமக்கு கோயம்புத்தூருங்களா? முன்பின் தெரியாதவர்களின் பேச்சில் மண் மணம் தெரிந்தால் போதும் ஏனுங் நமக்கு கோயம்புத்தூருங்களா? என கேட்பதிலேயே எதிரிலிருப்பவர் விழுந்து விடுவார் அப்படி ஒரு சிறப்பு பெற்றது கொங்கு மண்டலத்தின் கோவை தமிழ்..
கோவை சரளாவின் வட்டார மொழிவளம் கோவை தமிழ் உச்சரிப்புகளை ரசிக்காது காதுகள் இருக்காது. எத்தனையோ காமெடி நடிகைகள் இருந்தும் கோவை சரளா இன்றளவும் மார்க்கெட்டில் இருப்பதற்கு அவரின் வட்டார மொழிவளமே காரணம் என்பது யாரும் மறுக்க முடியாது.

சென்னை  பாஷை

துன்னு.. குந்து.. இஸ்துகினு.. சென்னை செந்தமிழ்… அழகு தமிழ்

 சென்னை மொழி பேசுவதற்கு அலாதியான மொழி. நல்ல அழகான தமிழ் சொற்கள் விரவிக் கிடக்கும் மொழி சென்னை செந்தமிழ். அய்ய இன்னா.. என்று சாதாரணமாக சொல்லிவிட்டால் கூட போதும். உடனே எதிரில் இருப்பவர் இளக்காரமான ஒரு பார்வை பார்த்து கேட்பார்கள் நீ என்ன மெட்ராசா.. என்று. அவ்வளவு மரியாதை சென்னை செந்தமிழுக்கு..

21-1487681726-chennai-central-railway-station1-600.jpg

சென்னையில் வந்து கால் பதிக்காத அயல்நாட்டுக்காரர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். டச்சு, போர்ச்சுகல், பிரெஞ்சு, இங்கிலாந்து, ஐரோப்பியர்களின் வருகைக்கு முன் அரேபியர்கள், சீனர்கள் என யார் வந்தாலும் சென்னையை தொடாமல் சென்றதில்லை. காரணம் உங்களுக்கே தெரிந்திருக்கும். வங்காள விரிகுடாவின் விரிந்த பகுதியைக் கொண்டது சென்னை என்று.

மத்தவங்க பாஷை இத்தனை நாட்டுக்கார்கள் சென்னைக்கு வந்து சென்றதும், ஆட்சி செய்து சென்றதும் போனதால் ல் பல மொழிச் சொற்களை சென்னையில் கலந்திருக்கும். அதனையும் தமிழ் போலவே பாவிப்பார்கள் சென்னை தமிழர்கள். அது வேறுமொழி சொல் என்பது அவர்களுக்கு தெரியாததுதான் இந்த மொழியின் சிறப்பே.

துன்னு..

373727-pti-chennai-metro-ed

பாத்துகினு நிக்கிற துன்னு.. என்று தெரு முனையில் இட்லி கடை வைத்திருக்கும் அம்மா தட்டில் இட்லியை வைத்து சர்வ சாதாரணமாக சொல்வார். துன்னு என்பதை கேட்டாலே வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் பலருக்கு இட்லி சாப்பிடுவதற்கு பதில் வாந்திதான் வரும் என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். துன்னு என்பது ‘தின்’ என்ற அழகிய தமிழ்ச் சொல்லின் வழக்குச் சொல். “என்னை தீ அள்ளி தின்னச் சொல் தின்பேன் என்று வைரமுத்து கவிதையை ‘டுயட்’ திரைப்படத்தில் பிரபு வாசித்தால் கை தட்டி ஆராவாரம் செய்பவர்கள் சென்னைக்காரர் சொன்னால் சிரிக்கிறார்கள். என்ன செய்ய?

குந்து..

ஊட்டுக்கு வந்ட்டு நின்னுனுகிற.. குந்து.. என்று சொல்லிவிட்டால் போதும், என்ன உட்கார் என்று சொல்லம்தானே என்பார்கள். தாய் மொழி என்பது தானாய் வருவது. உட்கார் என்ற சொல்லை விட இலக்கிய தரமும், அழகும் கொண்டது குந்து என்ற சொல்.. அதனால்தான் நமது பாவேந்தர் பாரதிதாசன் “காற்று குந்திச் சென்றது; மந்தி வந்து குந்தி” என்று குந்து, குந்தி என்ற சொற்களை அழகாக தனது கவிதைகளில் பயன்படுத்தி இருப்பதை காணலாம்.-  

அனைவருக்கும் உலகதாய்மொழி தினம் வாழ்த்துகள்

நன்றி one india tamil படித்ததில் பிடித்தது

தமிழ்நாட்டில் புது IPL HERO டி.நடராஜன் (வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்தார்)

சென்னை: சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நாடராஜன்தான் இப்போது டாக் ஆப் தி டவுன். அனைத்து ஊடகங்களும் இப்போது அவர் வசிக்கும் சின்னப்பம்பட்டி கிராமத்தை சுற்றி வருகின்றன. இத்தனைக்கும் காரணம்,

maxresdefault

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர், ரூ.3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான். சர்வதேச கிரிக்கெட் ஆடாத உள்ளூர் ஆட்டக்காரர் ஒருவர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இது நடராஜனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். பஞ்சாப் அணிக்காக ஆடப்போகிறார் என்பதால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மொகாலியில் அவர் தனது திறமையை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும் என்பது அவரின் கூடுதல் மகிழ்ச்சிக்கு காரணம்.

வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்தார்.. ஐபிஎல் ஹீரோ நடராஜன் வாழ்க்கை, இளைஞர்களுக்கு பாடம்

21-1487652953-natarajan-cricketer45

டென்னிஸ் பந்து வீரர்

டி.நடராஜன் என்று அறியப்படும் இந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரின் முழுப்பெயர் தங்கராசு நடராஜன். வளர் இளமை காலங்களில், கிராம அளவில் டென்னிஸ் பந்து போட்டிகளில் பங்கேற்று வந்தார். டென்னிஸ் பந்தை கொண்டே பேட்ஸ்மேன்களை அவர் திணறிடிக்கும் திறமை அவருக்குள் இருந்த கிரிக்கெட் ஆசையை சுடர்விடச் செய்தது.

21-1487652976-karthick-naren-677.jpg

சென்னை கொடுத்த திருப்புமுனை

சொந்த ஊரிலேயே இருந்தால் கிரிக்கெட்டில் சோபிக்க முடியாது என்பதை அறிந்து கொண்ட நடராஜன், சென்னை வந்தடைந்தார். சென்னையில்தான் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும், கார்க் பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு லீகில் ஜாலி ரோவர்ஸ், விஜய் சிசி ஆகிய அணிகளுக்காக ஆடி தனது திறமையை நிரூபித்தார்.

சர்ச்சை

இரண்டே ஆண்டுகள்தான். அதற்குள்ளாக நடராஜனின் திறமை காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து நடராஜன் முதல் தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16-ல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவர் பந்தை எறிவதாக, சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே பந்து வீச்சு ஸ்டைலை கொஞ்சம் மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

21-1487652953-natarajan-cricketer45

சோதனையை வென்று சாதனை

சோதனையான அந்த காலகட்டத்தில், பந்து வீச்சு ஸ்டைலை மாற்றி சிறப்பாக பந்து வீச நடராஜனுக்கு உதவியது, முன்னாள் தமிழ்நாடு இடது கை பவுலர் சுனில் சுப்ரமணியம் ஆகும். சமீபத்தில் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20யில்

lakshmipathy_balaji-500x400.jpg

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடினார். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி இவரது பந்து வீச்சிற்கு ஐடியாக்கள் கொடுத்து மெருகேற்றினார்

ஐபிஎல் ஹீரோ

images-2

தற்போது ரஞ்சியிலிருந்து மற்றொருபடி முன்னேறி ஐபிஎல் 2017ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இவர் ஆட உள்ளார். சர்வதேச பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச வேண்டிய சூழ்நிலை அப்போது ஏற்படும், சர்வதேச தரம்வாய்ந்த பவுலர்களுடன் பழகும் வாய்ப்பும் இவருக்கு கிடைக்கும். இதன் மூலம், நடராஜனின் ஆட்டத் திறன் மேலும் மெருகேரும் என நம்பலாம். இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால், அனேகமாக பஞ்சாப் அணி நடராஜனை இந்த சீசனிலேயே களமிறக்கும் என நம்பலாம்

கோடிகளின் பூஜ்யம் தெரியாது

இதுகுறித்து நடராஜன் கூறுகையில், “நான் ஐபிஎல் தொடரில் ஆட உள்ளது பற்றிதான் யோசித்துக்கொண்டுள்ளேன். கிடைத்துள்ள பணத்தை பற்றியல்ல. உண்மையை சொன்னால் 3 கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பது எனக்கு தெரியாது. ஐபிஎல் தொடரில் ஆடுவதன் மூலம், எனது கிரிக்கெட் திறமை மேம்படும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

தினக்கூலி தொழிலாளி

21-1487653139-natarajan-ipl4

நடராஜன் தந்தை நூற்பாலையில் தினக்கூலி தொழிலாளியாகும். தாயார், சாலையோர சிக்கன் மற்றும் ஸ்நாக்ஸ் கடை வைத்துள்ளார். 5 உடன்பிறப்புகளில் நடராஜன்தான் மூத்தவர். எனவே இளைய சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமண செலவுகளை 25 வயதாகும் நடராஜனே கவனித்துள்ளார். கிரிக்கெட் ஆடி வந்த வருமானத்தை கொண்டே இதை பூர்த்தி செய்துள்ளார். ஒரு சகோதரிக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.

நடராஜன் கனவு

“எங்கள் ஊரில் நல்லதாக ஒரு வீடு கட்ட வேண்டும். எனது சகோதர சகோதரிகள் இன்ஜினியரிங், சார்டட் அக்கவுண்ட் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும். இதற்கெல்லாம், இப்போது கிடைத்துள்ள பணம் உதவிகரமாக இருக்கும்” என்கிறார் நடராஜன். வாழ்க, வளர்க. நீங்களும் வாழ்த்தலாமே.

IPL DAMAKAA – IPL 2017 Player Auction Complete List, Price, Sold and unsold: Ben Stokes most expensive buy at Rs 14.5 crore, Karn Sharma most expensive Indian player sold for Rs 3.2 crore

IPL 2017 Player Auction was conducted on February 20 in Bengaluru inside the plush hotel rooms for the tenth edition of the league. With the league starting on April 5, teams had the auction as a launchpad to decide their strategy for the season in terms of players required and areas they need to improve upon.

stokes_647_101316032348

ocnotschiifsi_small

In terms of the big bucks spent, Ben Stokes was expected to be the big money signing and that proved to be the case as he was taken for Rs 14.5 crore by Rising Pune Supergiants. There was also much tussle for another England player Tymal Mills who went for a massive Rs 12 crore to boost Royal Challengers Bangalore.

From Indian players, Karn Sharma was the most expensive buy at Rs 3.2 crore while T Natararajan went for Rs 3 crore.

Pre IPL 2017 Auction Squads

Delhi Daredevils:

1

JP Duminy, Mohammed Shami, Quinton de Kock, Shahbaz Nadeem, Jayant Yadav, Amit Mishra, Shreyas Iyer, Zaheer Khan, Sam Billings, Sanju Samson, Chris Morris, Carlos Brathwaite, Karun Nair, Rishabh Pant, CV Milind, Syed Ahmed, Pratyush Singh.

Gujarat Lions:

images-1

Suresh Raina, Ravindra Jadeja, James Faulkner, Brendon McCullum, Dwayne Bravo, Aaron Finch, Dwayne Smith, Dinesh Karthik, Dhawal Kulkarni, Praveen Kumar, Andrew Tye, Ishan Kishan, Pradeep Sangwan, Shivil Kaushik, Shadab Jakati, Jaydev Shah.

Kings XI Punjab:

images-2

David Miller, Manan Vohra, Axar Patel, Glenn Maxwell, Gurkeerat Singh, Anureet Singh, Sandeep Sharma, Shardul Thakur, Shaun Marsh, Wriddhiman Saha, M Vijay, Nikhil Naik, Mohit Sharma, Marcus Stoinis, KC Cariappa, Armaan Jaffer, Pardeep Sahu, Swapnil Singh, Hashim Amla.

Kolkata Knight Riders:

photo

Gautam Gambhir, Sunil Narine, Kuldeep Yadav, Manish Pandey, Suryakumar Yadav, Piyush Chawla, Robin Uthappa, Shakib Al Hasan, Chris Lynn, Umesh Yadav, Yusuf Pathan, Sheldon Jackson, Ankit Singh Rajput.

Mumbai Indians:

300px-mumbai_indians_logo-svg_

Rohit Sharma, Kieron Pollard, Lasith Malinga, Harbhajan Singh, Ambati Rayudu, Jasprit Bumrah, Shreyas Gopal, Lendl Simmons, Vinay Kumar, Parthiv Patel, Mitchell McClenaghan, Nitish Rana, Siddhesh Lad, J Suchith, Hardik Pandya, Jos Buttler, Tim Southee, Jithesh Sharma, Krunal Pandya, Deepak Punia.

Rising Pune Supergiants:

images

MS Dhoni, Ajinkya Rahane, R Ashwin, Steven Smith, Faf du Plessis, Mitchell Marsh, Ashok Dinda, Ankush Bains, Rajat Bhatia, Ankit Sharma, Ishwar Pandey, Adam Zampa, Jaskaran Singh, Baba Aparajith, Deepak Chahar, Usman Khawaja, Mayank Agarwal.

Royal Challengers Bangalore:

Virat Kohli, KL Rahul, AB de Villiers, Chris Gayle, Yuzvendra Chahal, Harshal Patel, Mandeep Singh, Adam Milne, Sarfaraz Khan, S Aravind, Kedar Jadhav, Shane Watson, Stuart Binny, Samuel Badree, Iqbal Abdulla, Travis Head, Sachin Baby, Avesh Khan, Tabraiz Shamsi

Sunrisers Hyderabad:

images

Shikhar Dhawan, Bhuvneshwar Kumar, David Warner, Moises Henriques, Naman Ojha, Ricky Bhui, Kane Williamson, Siddarth Kaul, Bipul Sharma, Ashish Nehra, Yuvraj Singh, Ben Cutting, Abhimanyu Mithun, Mustafizur Rahman, Barinder Sran, Deepak Hooda, Vijay Shankar.

 

Here is the list of players sold in the IPL 2017 Auction and where they’re headed

(This list will be updated as the IPL Auction goes on)

Kanishk Seth (up for bidding again) goes unsold

Sayan Ghosh (up for bidding again) sold to Kolkata Knight Riders for Rs 10 lakh

David Wiese (up for bidding again) goes unsold

Manoj Tiwary (up for bidding again) sold to Rising Pune Supergiants for Rs 50 lakh

Darren Bravo (up for bidding again) sold to Kolkata Knight Riders for Rs 50 lakh

Aksh Deep Nath (up for bidding again) sold to Gujarat Lions for Rs 10 lakh

Pratham Singh sold to Gujarat Lions for Rs 10 lakh

Rahul Tripathi sold to Rising Pune Supergiants for Rs 10 lakh

Ishank Jaggi sold to Kolkata Knight Riders for Rs 10 lakh

R Sanjay Yadav sold to Kolkata Knight Riders for Rs 10 lakh

Ashton Turner goes unsold

Himmat Singh goes unsold

Amit Verma goes unsold

Shubham Agrawal sold to Gujarat Lions for Rs 10 lakh

Shelly Shaurya sold to Gujarat Lions for Rs 10 lakh

Baba Indrajith goes unsold

Mahmudullah goes unsold

Shabbir Rahman goes unsold

Mehedi Hasan goes unsold

Manjeet Chaudhary goes unsold

Chriag Suri goes unsold

Virat Singh goes unsold

Tajendra Singh goes unsold

Kesrick Williams goes unsold

Ben Wheeler goes unsold

Dwaine Pretorious goes unsold

Andile Phehlukwayo goes unsold

Colin de Grandhomme goes unsold

Kulwant Khejroliya sold to Mumbai Indians for Rs 10 lakh

Milind Tandon sold to Rising Pune Supergiants for Rs 10 lakh

Shashank Singh sold to Delhi Daredevils for Rs 10 lakh

Rinku Singh sold to Kings XI Punjab for Rs 10 lakh

Harpreet Singh Bhatia goes unsold

Munaf Patel sold to Gujarat Lions for Rs 30 lakh

Lockie Ferguson goes unsold

Mitchell Santner goes unsold

Darren Sammy sold to Kings XI Punjab for Rs 30 lakh

Rovman Powell sold to Kolkata Knight Riders for Rs 30 lakh

Wayne Parnell goes unsold

Jimmy Neesham goes unsold

Colin Munro goes unsold

Dan Christian sold to Rising Pune Supergiants for Rs 1 crore

Asela Gunarathne sold to Mumbai Indians for Rs 30 lakh

Joe Burns goes unsold

Saurabh Kumar sold to Rising Pune Supergiants for Rs 10 lakh

Rauhl Chahar sold to Rising Pune Supergiants for Rs 10 lakh

Mohammed Siraj sold to Sunrisers Hyderabad for Rs 2.6 crore

Kanishk Seth goes unsold

Sayan Ghosh goes unsold

Ronsford Beaton goes unsold

Rishi Arothe goes unsold

Distant Yagnik goes unsold

Pankaj Jaiswal goes unsold

Akhil Herwadkar goes unsold

Akash Bhandari goes unsold

Apoorv Wankhede goes unsold

Himanshu Rana goes unsold

Billy Stanlake (up for bidding again) sold to Royal Challengers Bangalore for Rs 30 lakh

Ben Laughlin (up for bidding again) sold to Sunrisers Hyderabad for Rs 30 lakh

David Wiese (up for bidding again) goes unsold

Parvez Rasool (up for bidding again) goes unsold

Thisara Perera (up for bidding again) goes unsold

Manoj Tiwary (up for bidding again) goes unsold

Evin Lewis (up for bidding again) goes unsold

Darren Bravo (up for bidding again) goes unsold

Mitchell Swepson (up for bidding again) goes unsold

Mayank Dagar (up for bidding again) goes unsold

Navdeep Saini (up for bidding again) sold to Delhi Daredevils for Rs 10 lakh

Vishnu Vinod (up for bidding again) goes unsold

Aksh Deep Nath (up for bidding again) goes unsold

Praveen Dubey (up for bidding again) sold to Royal Challengers Bangalore for 10 lakh

Unmukt Chand (up for bidding again) goes unsold

Imran Tahir (up for bidding again) goes unsold

Ish Sodhi (up for bidding again) goes unsold

Pragyan Ojha (up for bidding again) goes unsold

Ishant Sharma (up for bidding again) goes unsold

Nathan Coulter-Nile (up for bidding again) sold to Kolkata Knight Riders for Rs 3.50 crore

Kyle Abbott (up for bidding again) goes unsold

Jonny Bairstow (up for bidding again) goes unsold

Irfan Pathan (up for bidding again) goes unsold

Chris Jordan (up for bidding again) sold to Sunrisers Hyderabad for Rs 50 lakh

Sean Abbott (up for bidding again) goes unsold

Saurabh Tiwary (up for bidding again) sold to Mumbai Indians for Rs 30 lakh

Jason Roy (up for bidding again) sold to Gujarat Lions for Rs 1 crore

Martin Guptill (up for bidding again) sold to Kings XI Punjab for Rs 50 lakh

Rahul Sharma goes unsold

Nathan Lyon goes unsold

Akila Dananjaya goes unsold

Michael Beer goes unsold

Fawad Ahmed goes unsold

Manpreet Gony sold to Gujarat Lions for Rs 60 lakh

Varun Aaron sold to Delhi Daredevils for Rs 2.80 crore

Ben Laughlin goes unsold

Jaydev Unadkat sold to Rising Pune Supergiants for Rs 30 lakh

Pankaj Singh goes unsold

Billy Stanlake goes unsold

Matt Henry sold to Kings XI Punjab for Rs 50 lakh

RP Singh goes unsold

Glenn Phillips goes unsold

Brad Haddin goes unsold

Niroshan Dickwella goes unsold

Kusal Perera goes unsold

Shane Dowrich goes unsold

Anamul Haque goes unsold

Farhaan Behardien goes unsold

Thisara Perera goes unsold

Rishi Dhawan sold to Kolkata Knight Riders for Rs 55 lakh

David Wiese goes unsold

Karn Sharma sold to Mumbai Indians for Rs 3.2 crore

Jason Holder goes unsold

Chris Woakes sold to Kolkata Knight Riders for Rs 4.20 crore

Parveez Rasool goes unsold

Nick Maddinson goes unsold

Darren Bravo goes unsold

Evin Lewis goes unsold

Marlon Samuels goes unsold

S Badrinath goes unsold

Michael Klinger goes unsold

Abhinav Mukund goes unsold

Cheteshwar Pujara goes unsold

Manoj Tiwary goes unsold

Pravin Tambe sold to Sunrisers Hyderabad for Rs 10 lakh

Akshay Wakhare goes unsold

Mitchell Swepson goes unsold

Rashid Khan Arman sold to Sunrisers Hyderabad for Rs 4 crore

Sarabjeet Ladda goes unsold

Tejas Singh baroka sold to Gujarat Lions for Rs 10 lakh

Mayank Dagar goes unsold

M Ashwin sold to Delhi Daredevils for Rs 1 crore

Basil Thampy sold to Gujarat Lions for Rs 85 lakh

Pawan Suyal goes unsold

Navdeep Saini goes unsold

Umar Nazir goes unsold

Nathu Singh sold Gujarat Lions for Rs 50 lakh

T Natarajan sold to Kings XI Punjab for Rs 3 crore

Aniket Choudhary sold to Royal Challengers Bangalore for Rs 2 crore

AN Ahmed goes unsold

Manvinder Bisla goes unsold

Mohit Ahlawat goes unsold

Mohammad Shahzad goes unsold

Eklavya Dwivedi sold to Sunrisers Hyderabad for Rs 75 lakh

Aditya Tare sold to Delhi Daredevils for Rs 25 lakh

Shreevats Goswami goes unsold

Vishnu Vinod goes unsold

Priyank Panchal goes unsold

Rush B Kalaria goes unsold

Manan Sharma goes unsold

Shivam Dube goes unsold

Praveen Dubey goes unsold

Rahul Tewatia to Kings XI Punjab for Rs 25 lakh

Krishnappa Gowtham sold to Mumbai Indians for Rs 2 crore

Mohammad Nabi sold to Sunrisers Hyderabad for Rs 30 lakh

Mahipal Lomror goes unsold

Aksh Deep Nath goes unsold

Tanmay Agarwal sold to Sunrisers Hyderabad for Rs 10 lakh

Asghar Stanikzai goes unsold

Unmukt Chand goes unsold

Ankeet Bawane sold to Delhi Daredevils for Rs 10 lakh

Prithvi Shaw goes unsold

Umang Sharma goes unsold

Imran Tahir goes unsold

Pragyan Ojha goes unsold

Brad Hogg goes unsold

Ish Sodhi goes unsold

Lakshan Sandakan goes unsold

Ishant Sharma goes unsold

Kyle Abbott goes unsold

Mitchell Johnson sold to Mumbai Indians for Rs 2 crore

Pat Cummins sold to Delhi Daredevils for Rs 4.5 crore

Tymal Mills sold to Royal Challengers Bangalore for Rs 12 crore

Trent Boult to Kolkata Knight Riders for Rs 5 crore

Kagiso Rabada sold to Delhi Daredevils for Rs 5 crore

Nathan Coulter-Nile goes unsold

Dinesh Chandimal goes unsold

Johnson Charles goes unsold

Nicholas Pooran sold to Mumbai Indians for Rs 30 lakh

Andre Fletcher goes unsold

Jonny Bairstow goes unsold

Ben Dunk goes unsold

Chris Jordan goes unsold

Sean Abbott goes unsold

Corey Anderson sold to Delhi Daredevils for Rs 1 crore

Ben Stokes sold to Rising Pune Supergiants for Rs 14.50 crore

Irfan Pathan goes unsold

Angelo Mathews sold to Delhi Daredevils for Rs 2 crore

Pawan Negi sold to Royal Challengers Bangalore for Rs 1 crore

Saurabh Tiwary goes unsold

Ross Taylor goes unsold

Alex Hales goes unsold

Faiz Fazal goes unsold

Jason Roy goes unsold

Eoin Morgan sold to Kings XI Punjab for Rs 2 crore

Martin Guptill goes unsold

யாரு தலை தப்பும் (நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு)

அதிமுக அரசு தனது பெரும்பான்மையை நீருபிக்க வேண்டிய கட்டயத்தில் இருக்கிறது .

15f91319360055-562d911c167d1

அதிமுக சசிகலா அணி ஒபிஸ் அணி என இரண்டும் பிரிவுகளாக இருக்கிறது.sasikala-ops

இந்த நிலையில் நம்மிக்கை வாக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் எங்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள் .

tamil-nadu-secretariat-tamil-nadu-assembly_650x400_51424371364

இந்நிலையில் பிரதான எதிர்க்கட்சியான திமுக வாக்கெடுப்பில் அதிமுக அரசு கவில வேண்டும் என்பதை விருப்பும் .

dmk-6

அதனால் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவே வாக்களிப்போம் என்று பகிரங்கமகவே அறிவித்துள்ளது.

மேலும் வாக்கெடுப்பில் நாளை எடப்பாடி பழனிச்சாமி  பெரும்பான்மையை நீருபிப்பார அதிமுக அரசு டிஸ்மிஸ் ஆகுமா என்பதை நாளை பொருத்திருந்து பார்போம்.

எது எப்படியோ நல்ல ஆட்சி அமைந்தால் நாட்டுக்கும் , நாட்டு மக்களுக்கும் நல்லது!

சசிகலா குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி

இந்த 3 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேரும் 4 வாரத்துக்குள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

sasikala-ilavarasi-sudhakaran-14-1487049647

ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார். இதனிடையே இன்று (பிப்ரவரி 14) இந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.

—நன்றி ONEINDIATAMIL

பெர்முடா முக்கோண மர்மம்!

                                            இதுதான் காரணமா?

இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.

trianglemap

பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை அள்ளித் தந்துள்ளன. ஆனால், பெர்முடா முக்கோணத்தின் மர்மம் மட்டும் மர்மமாகவே இருந்தது.

பெர்முடா முக்கோணம் என்றால் என்ன ?

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர் தான் பெர்முடா முக்கோணம். இதை சாத்தானின் முக்கோணம் என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாய் மறைந்து போவதுதான்.

bdaerial01

பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும் போது திசை காட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன் முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். அந்தப் பகுதியில் வானத்தில் ஓர் எரிப்பந்தைக் கண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அதன்பின் 1872-ம் ஆண்டு ‘மேரி செலஸ்டி’என்கிற கப்பலும், 1918-ம் ஆண்டு ‘யு.எஸ்.எஸ் சைக்ளோப்ஸ்’ என்கிற கப்பலும் சில நூறு பயணிகளுடன் காணாமல் போனது.

150505144444_mideast_arms_gch_640x360_thinkstock_nocredit
1945-ம் ஆண்டு பிளைட் 19 வகையைச் சேர்ந்த 5 ராணுவ விமானங்கள் அந்தப் பகுதியில் பறக்கும்போது காணாமல் போயின. 1949-ல் ஜமைக்கா நாட்டுக்குச் சொந்தமான பயணிகள் விமானம் 39 பயணிகளுடன் மாயமானது. இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சம்பவங்கள் அந்தப் பகுதியில் நிகழ்ந்ததாகப் பதிவாகி இருப்பதால், அது மர்மப் பிரதேசமாகவே திகழ்கிறது.

விமானியின் அனுபவம் 

இதுவரை அந்தப் பகுதியில் காணாமல் போன விமானங்களோ, கப்பல்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அந்தப்பகுதியில் இருந்து தப்பி வந்த புரூஸ் ஹெனன் என்கிற விமானி சொன்ன அனுபவம் தான் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆராய்ச்சிக்கு விதையாக அமைந்தது.

maxresdefault

அவர் ஒருமுறை மியாமியிலிருந்து பனாமா கால்வாய் வழியாகத் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தீடீரென்று அவரைச் சுற்றி கருமேகங்கள் சூழ்ந்தது, திசைகாட்டும் கருவி விடாமல் சுற்றிக் கொண்டே இருந்தது. அவரால் திசையைத் தீர்மானிக்க முடியவில்லை.

Continue reading பெர்முடா முக்கோண மர்மம்!

தாஜ்மகாலை பற்றி பலரும் அறியாத சுவரஸ்யங்கள்

 ஒரு கட்டக்கலை மிக சிறந்த எடுத்துக்காட்டு தான் தாஜ்ம்கால்

p1120577-af-topaz-clarity-1024-w-star-effects

ஒரு தடவை மன்னன் சாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட சாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டு ஆய்வது.
அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள்.

untitled

அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார்.

சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ்.
சாஜஹானின் மனைவியன் பெயர்கள் என்ன? சாஜஹானின் மனைவி

மும்தாஜ் எவ்வாறு இறந்தார்?
மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில் முதலாமவர் அக்பர்பாடி மஹால் அடுத்தவர் கண்டாரி மஹால் மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.

1631ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காக மத்திய இந்தியாவுக்குப் படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது, மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்குத் திடீரென்று ஜன்னி பிறந்தது.
ஷாஜகானுக்கு தகவல் சொல்லப்பட் டது. பதறிப்போய் ஓடிவந்தார் ஷாஜகான். அருமை மனைவியை அழுதபடி வாரி மடியில் இருந்திக்கொண்டார்.

 

சில நிமிடங்கள் கணவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. அன்பு மனைவியின் பிரிவைத் தாக்கமுடியாமல் துவண்டுபோனார் மன்னர். அந்த அன்புக்காக உளிச்சத்தங்களால் அறிவிக்கப்பட்ட வெள்ளை மௌனம்தான் அந்த தாஜ்மஹால்.

1

உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை. தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது.
இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார்.

mosque-s-facade-taj-mahal-24005109
வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.
அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான்.

02791792829c5aa29c4c3c559cfe6600

1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்ஸ. அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன. தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.

173178797
தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான்.

 

புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார். இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் ‘அமானாத்கான்’ பெயர் சிபாரிசுச் செய்யப்பட்டது. ‘நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை ‘சரிஸகையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான். இன்றைக்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது.

2
இப்படி அங்குலம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான். தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.
பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது. இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா?
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள். லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார். இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்ஸ இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுஸ.

கலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார். அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே ஸ ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.
இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்.

மும்தாஜின் கடைசி நாள்:
மும்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள்.

தாஜ்மஹால் உண்மை ரகசியம்: (காதலின் சின்னம்)
தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.
இப்ப விஷயத்துக்கு வருவோம்.

தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று பேராசிரியர் பி. என். ஓக் குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் “தேஜோ மஹாலயா” என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார். நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) “ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்”. எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.
முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை “தாஜ் மஹால்” எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் “மஹால்” எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த “மஹால்” எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், “மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு “தாஜ்” என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும்.

மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் – “பாதுகாப்பு” எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

MEDICAL FRUITS IN COURTALLAM குற்றாலத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவக் கனிகள்

குற்றாலம்

குற்றாலம்: குற்றாலத்தில் குளியல் முடித்த சுற்றுலா பயணிகள் ஊருக்கு புறப்படும் முன்பு செல்லும் இடம் பெரும்பாலும் பழக்கடையாகத்தான் இருக்கும்.

courtallam-mainfalls

தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதால் அரிய வகை பழங்கள் அனைத்தும் குற்றாலத்தில் கிடைக்கிறது.

78900520

குற்றாலத்தின் கடை வீதிகளில் வண்ண வண்ண நிறங்களில் துரியன்,ரம்புட்டான், மங்குஸ்தான் என வகை வகையான பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

1024px-courtallam_five_falls

கிலோ ரூ.500க்கு விற்கப்படும் துரியன் பழம் முதல் ரூ.5க்கு விற்கப்படும் வாழைப்பழம் வரை பல இடங்களில் விற்பனைக்காக வைத்துள்ளனர்.

மருத்துவ குணம் கொண்ட பழங்கள்

குளிர்ச்சியை தரக்கூடிய மங்குஸ்தான் பழங்கள் அதிகம் மருத்துவ குணம் உடையது .ரம்புட்டான் பழங்களும் அதைப் போலத்தான். வைட்டமின் சி அதிகம் உள்ளாதல் விரும்பி வாங்கி செல்கின்றனர். மகப்பேறு உண்டாக்ககூடிய துரியன் பழங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகிறன.

துரியன் பழங்கள்

துரியான் மற்றும் மங்குஸ்தான் பழங்கள் கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியவை ஆகும்.

950

மலட்டுத்தன்மையை போக்கும் தன்மை உடையதாக கருதப்படும் துரியன் பழங்களும் குற்றாலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

அற்புத பழங்கள்

1468285413814

குவியும் பழங்கள் துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம். ஸ்டார் புரூட், மா, பலா, வாழை, கொய்யா, பன்னீர் கொய்யா, சப்போட்டா, பேரிக்காய், வால்பேரி, பப்பாளி, பேரீச்சை, திராட்சை, ஆப்பிள், பிளம்ஸ்,     ரம்புட்டான் பழம் ஆரஞ்ச், மாதுளை என ஏராளமான பழ வகைகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

Continue reading MEDICAL FRUITS IN COURTALLAM குற்றாலத்தில் கொட்டிக்கிடக்கும் மருத்துவக் கனிகள்

STOMACH PAIN (வயிற்று வலி)

வயிற்று வலி

மனித உடலில் பெரும் பகுதியாக இருப்பது வயிறு. நெஞ்சில் இருந்து இடுப்புக்கு இடைபட்ட பகுதிதான் வயிறு. இந்த வயிறு பகுதியில்தான் நாம் உண்ணும்  உணவு, பருகும் நீர்,  இவற்றை செரிமானம் செய்யக்கூடிய  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற ஜீரண மண்டல  உறுப்புகள் அடங்கியுள்ளது.

pain

வயிற்று பகுதியில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த வயிற்று வலி வேதனை என்பது தாங்க முடியாதது. இதற்கு வயது  வித்தியாசம் எல்லாம் கிடையது. இந்த வயிற்று வலிக்கான காரணம் என்ன? இதை தவிர்ப்பது எப்படி, இதற்கான சிகிச்சைகள் என்ன? அதுபற்றிய விவரங்கள்: வயிற்றில் குடல்புண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, செரிமான குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை,  குடல் அழற்சி, குடல் வால்  அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள்  போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுவலி ஏற்படலம்.
வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வலி வரலாம்.

நெஞ்சு எரிச்சல்

குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள்,  தொடர் கணைய  அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும்  (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும்.

p47

உணவுக்குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். அத்துடன் மன உளைச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படும்.

உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும். அதேபோல் அடி வயிற்றில் வலி  ஏற்பட்டால் குடல் பிரச்னை  குறிப்பாக சுருக்கம் மற்றும் புற்றுக்கட்டியாக இருக்கக்கூடும். பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு காரணம் புற்று நோயாக இருக்கக்கூடும். இதனால் மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப்  பெருக்கம் போன்ற பல  பிரச்னைகள் ஏற்படலாம்.

அல்சர்

அல்சர் உள்ள நோயாளிக்கு அதிகமாக பசி எடுக்கும். இவர்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும்.

45062936-stomach-ulcer-in-human-body-illustration

அதிகமான கவலை, மன உளைச்சல், உணர்ச்சி வேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின்  தாக்கத்தால்தான்  பெரும்பாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

இளநீர்

17-1479368629-5-tender-coconut-10-600

அல்சர்,மற்றும் வயிறு சம்மதமான பிரச்சனைகளுக்கு தினமும் இளநீர் பருக வயிற்று வலி எளிதில் குணமடையும்

அறிகுறி

வலதுபுறத்தில் வலி ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கல், அப்பென்டிக்ஸ் அல்லது அல்சர் போன்றவை இருக்கலாம். அதுவே இடதுபுறத்தில் வலி ஏற்பட்டால்,  குடலில் புண் (அதிக  வலி இருந்தால் குடல் புற்றுநோய்), குழாய்களில் ஏதேனும் சதை வளர்ச்சி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் என்பதற்கான அறிகுறி  ஆகும். மலச்சிக்கலும் வயிற்றுவலியை உண்டாக்கும். அதிலும் எப்போது குடலின் இயக்கம் சரியாக இயங்காமல், மிகவும் வலுவற்று இருக்கிறதோ, அப்போது  அடிவயிற்றில் கடுமையான வலி  ஏற்படும்.

anatomical-diagram-digestive-tract-human-system-alimentary-canal-including-text-labels-65651272

ஏனெனில், அந்த நேரத்தில் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல், சரியான அழுத்தமின்றி உடலிலேயே  தங்கிவிடுகின்றன. உடலில் வாயு அதிகமாக உள்ளதோ, அப்போது வயிற்றில் ஒருவித வீக்கம் ஏற்படுவது போல் இருப்பதோடு, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குவது போல்  இருக்கும். இதற்கு உண்மைய £ன காரணம், வயிற்றில் புண் இருக்கிறது என்பதாகும். அதனால்தான் வயிற்றில் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு  போன்றவை ஏற்படுகிறது. காரமான உணவு, செரிமானமின்மை மற்றும் வாயுத்தொல்லை போன்றவை வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, வலியை உண்டாக்குகின்றன.

வயிற்று வலியை தவிர்க்க

*  ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி ஏற்படாது.
* உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக  சாப்பிட்டால் உடலில் உள்ள  செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி ஏற்படும்.
* உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பழங்கள் காய்கறிகள்

fruit-4

நல்ல சுத்தமான பழங்கள் மற்றும் காய்கறிகளை நம் உண்ணும் அன்றட உணவில் செர்க்க வேண்டும்

மதுளை பழம்,கொய்ய பழம் ,அத்தி பழம்,பேரிச்சை, போன்ற பழ வகைகளை நம் உண்ணும் அன்றட உணவில் செர்க்க வேண்டும்

319066-svetik

காரட்,பீட்ரூட்,முட்டைகோஸ்,மற்றும் கீரை வகைகளை தினமும் சாப்பிட வேண்டும்

தினமும் பழச்சாறு ,குளிர்ச்சியான பால், உலர் பழங்கள் பயறு வகைகள் மிகுதியாக எடுத்து கொள்ள வேண்டும்
முதலுதவி
* வயிற்று வலி ஏற்பட்டால் தகுந்த மாத்திரைகளை உட்கொள்ளலாம். வயிற்றுப்புண், மாதவிடாய் உட்பட எல்லா வயிற்று வலிகளுக்கும் பொதுவான முதலுதவி  இது. இந்த மாத்திரை  கிடைக்காவிட்டால், ஒரு கண்ணாடி பாட்டிலில் வெந்நீரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு துணியால் சுற்றிக்கொண்டு, வயிற்றில் ஒத்தடம்  தரலாம்.
* மேல் வயிற்றில் வலி உண்டானால், அது இரைப்பைப் புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக இருக்கலாம். இதற்கு அமில நீர்ப்பு மருந்து (எ.கா.  ஜெலுசில், டைஜீன்) அல்லது  அமில எதிர்ப்பு மாத்திரைகளில் (எ.கா. ரேபிபிரசோல், பேன்டபுரசோல்) பயன்படுத்தலாம்.
* மலச்சிக்கல் காரணமாக வயிறு வலித்தால், வயிற்றுவலி மாத்திரையுடன், மலமிளக்கி மாத்திரை (எ.கா. பர்கோளக்ஸ்) ஒன்றை இரவில் சாப்பிட்டுக்  கொள்ளலாம்.
* இரவு நேரத்தில் மட்டும் வயிற்றுவலி வந்தால் அதற்கு குடல்புழு காரணமாகும். இதற்கு குடல்புழு மாத்திரை (எ.கா. அல்பண்டசோல்) சாப்பிடலாம்.
* சிறுநீர் கடுப்புடன் அடிவயிறு அல்லது கீழ்முதுகு வலித்தால், சிறுநீரகக்கல் காரணமாக இருக்கும். இதற்கு வயிற்றுவலி மாத்திரையுடன், 200 மி.லி. தண்ணீரில்  2 கரண்டி ‘சிட்ரால்கா  சிரப்‘ கலந்து குடிக்கலாம். குளிர்ச்சியான பானங்கள் மற்றும் பழரசங்களைக் குடிக்கலாம்.
* இரைப்பை அழற்சி அல்லது செரிமானக்குறைபாடு இருந்தால், வயிற்று வலியுடன் புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் இருக்கும். இதற்கு இளநீர்  அருந்தலாம். ‘எலெ க்ட்ரால்‘ பவுடர், புளிப்பில்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்லது குளிர்ச்சியான பானங்களை அருந்தலாம்.
* வாயு சேர்ந்து வயிறு வலித்தால், ‘சைமத்திக்கோன்‘, ‘சார்க்கோல்‘ மாத்திரைகளில் ஒன்றை சாப்பிடலாம்.

கோடைக்கால வயிற்று வலி

கோடைக்காலங்களில் பலருக்கு வயிற்று வலி பிரச்னை சற்று அதிகமாக காணப்படும். இவர்கள் கோடைக்காலத்தில் கசப்பு சுவை கொண்ட பொருட்களைக்  குறைவாகவும், கார்ப்பு சுவை  கொண்ட பொருட்களை கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடலாம். பாசிப்பருப்பை வேகவைத்து சுமார் 30 நிமிடங்களுக்குப் பின், சுத்தம் செய்யப்பட்ட அரிசியை போட்டு வேக வைத்து அதில் சிறிய துண்டுகளாக வெட்டிய தாமரை  தண்டை சேர்த்து கஞ்சி  காய்ச்ச வேண்டும்.

இதை மிதமான சூட்டில் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். வயிற்று  வலி பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம். இளநீர் போன்ற உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

God can Only Judge ME